Header Ads



யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், காட்டப்படும் பாரபட்சம்

இலங்கையின் பல்கலைக்கழக வரலாற்றில் மிகத் தொன்மையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்பேசும் சமூகத்தின் மிகப்பெரும் சொத்தாக மதிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் பல்லாயிரக்கணக்கான அறிஞர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் தொடர்பான கடந்தகாலப் பார்வை பாராட்டத்தக்கதாகவே இருந்துள்ளது. ஆயினும் அண்மைக்கால கல்வி ரீதியான முன்னெடுப்புக்கள் கவலை தருவதாகவும், சமூகங்களுக்கிடையில் சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

அண்மையில் யாழ் பல்கலைக்கழத்தின் கல்விப் பீடத்தினால் நடாத்தப்பட்ட கல்வி முதுமாணிக்கான நுழைவுப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையும் பின்வரும் நியாயங்களினால் கல்விப் பீடத்தின் நேர்மை ஈனத்தையும், பாரபட்சத்தையும் பறைசாட்டுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. 

1. பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் பரீட்சாத்தி என்றவகையில் நுழைவுப் பரீட்சையில் பரீட்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு பரீட்சை மண்டபத்திலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து தொடராக முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்படடன. வௌ;வேறு சந்தர்ப்பங்களில் விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளின் பரீட்சை ஒழுங்குபடுத்தல் எவ்வாறு இன ரீதியான அமைந்திருக்க முடியும்? எனவே நுழைவுப் பரீட்சை என்ற நாடகம் நடந்தேறியுள்ளதாகவே சிந்திக்கத் தோன்றுகின்றது.

2. வெளிவாரிக் கற்கை நெறிக்காக விண்ணப்பம் கோருகின்ற அனைத்து பல்கலைக்கழங்களிலும், நிறுவகங்களிலும் (உதாரணமாக திறந்த பல்கலைக்கழகம். கிழக்குப் பல்கலைக்கழகம், தேசியக் கல்வி நிறுவகம்) நுழைவுப் பரீட்சையில் பெறும் புள்ளிகளை அடிப்படையாக வைத்தே தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தினால் நேர்முகப்பரீட்சை என்ற ஒன்று நடாத்தப்படுகிறது. நேர்முகத் தேரிவில் நடுவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்து, (கடிதம் மூலம் வினவப்பட்டிருந்த எந்தவித ஆவணங்களையும் பரீட்சிக்கவில்லை.) அது வெறும் பொய்முகத் தேர்வு நடப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

3. 2014ஃ2015 ஆண்டு யாழ் பல்கலைக்கழக கல்விப் பீடத்தில் முதுமாணிக் கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களில் 2 பேர் மாத்திரமே முஸ்லிம். ஏனைய 98 மாணவர்களும் தமிழ் மாணவர்கள். 2015ஃ2016 ஆண்டு யாழ் பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் முதுமாணிக் கற்கைக்காக தெரிவு செய்யப்பட்ட 101 மாணவர்களில் 4 மாணவர்கள் மாத்திரமே முஸ்லிம்கள். ஏனைய மிகுதி 97 பேரரும் தமிழ் மாணவர்களாகும். இது மற்றவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வழங்கப்படுகின்ற ஒரு கண்துடைப்பாகும்.

மேற்குறித்த சந்தேகங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஒரு பிழையான எண்ணக்கருவை தோற்றுவித்துள்ளது. இந்நாட்டின் தேசிய பல்கலைக்கழங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கல்விப் பீடம் ஒரு இனத்தை மாத்திரம் சார்;ந்து செயற்படுவது, சமூகங்களுக்கிடையில் பிழையான மனக்குரோதங்களை ஏற்படுத்துவதற்கு வலிகோலும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்களாக தங்களை அடையாளப்படுத்தும் இச்சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தின் இச்செயற்பாடு, முஸ்லிம் மாணவர்களுக்கு பாரிய ஏமாற்றமாகும். யாழ்ப்பாண நூலகத்தை எரித்து, தமிழ் சமூகத்தின் கல்வியை சீரழிக்க நாடியவர்களுக்கும், இத்தகைய கல்விப் பீடத்தின் செயற்பாட்டிற்கும் என்ன வித்தியாசமுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது.ஒரு சமூகம் தான் பெற்றுக்கொண்ட அதே வலியினை அடுத்த சமூகத்தின் மீது திணிப்பது எந்தவகையில் நியாயமாக முடியும்? என்ற கருத்து பலமாக தொனிக்கின்றது.

எனவே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தனது கௌரவத்தை மீளக்கட்டியெழுப்பி, கல்வி தர்மத்தை நேர்மையாக வழங்குகின்ற நிறுவனம் என்ற அடையாளத்தை பெற்று, நல்ல நம்பிக்கையை மேலும் வளர்க்க வேண்டுமாயின் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. வெளிப்படைத் தன்மையுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
2. விமர்சனங்களைக் களைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மூதவை உரிய கவனம் செலுத்தி யாழ் பல்கலைக்கத்தின் கௌரவத்தையும், கல்விச் சமூகத்தின் கௌரவத்தையும் களைய முன்வரவேண்டும்.

ச.மு. சுக்ரி
கல்வி  முதுமாணிப் பரீட்சையிலும், நேர்முகத் தேர்விலும்  கலந்துகொண்ட மாணவன் 

1 comment:

Powered by Blogger.