Header Ads



மதுபானசாலைக்கு எதிராக, ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கையெழுத்து வேட்டை..!

(சுலைமான் றாபி)

நிந்தவூர் பிரதேசத்தின் எல்லையை அண்மித்த (வெட்டாறுப்பாலம்) பகுதியில் காரைதீவின் ஆரம்ப எல்லையில் அமையப்பெறவுள்ள மதுபானசாலைக்கு எதிராக நாளை (06) ஜும்ஆத் தொழுகையினைத் தொடர்ந்து நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசலில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிந்தவூர் ஜும்மாப்பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார்.

காரைதீவு மக்கள் வங்கிக்கு அருகாமையில்  அமையப்பெற்றுள்ள குறித்த மதுபானசாலையானது நிந்தவூரின் வடக்கு எல்லைப்பிரதேசத்தை அண்டிய பகுதியில் இது அமையப்பெறவுள்ளதால் இதன் மூலம் சமூகம் அடையும் பாதிப்புக்களை மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதோடு, இது சம்பந்தமாக மக்களைத் தெளிவூட்டவும் இவ்விடயம் பற்றி நிந்தவூர் பிரதேச செயலாளரிடம் கொண்டுவரவும் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த மதுபானசாலை அமைவதற்கு எதிராக  அனைவரும் தங்களது கையெழுத்துக்களை இடவேண்டும் என்றும் இந்தவிடயம் சம்பந்தமாக இன்று (05) காரைதீவு பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.