Header Ads



காரைதீவு மத்தியஸ்த சபை அமர்வை, முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு

காரைதீவு மத்தியஸ்த சபையின் தவிசாளராக அபூபக்கர் கலீலுர் றஹ்மான் அவர்கள் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. 

5 நாட்கள் கொண்ட மத்தியஸ்தம் தொடர்பான செயலமர்வு ஒன்று கடந்த மே மாதம் 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை அம்பாறையில் நடைபெற்றது. அச்செயலமர்வின் முடிவில் பரீட்சையும் நடாத்தப்பட்டது. இதனடிப்படையில் பெறப்பட்ட புள்ளிகளை மையமாக வைத்து அதிகூடுதலான புள்ளிகளை பெற்றதன்படியே  அபூபக்கர் கலீலுர் றஹ்மான் காரைதீவு மத்தியஸ்த சபைத் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

சபையில் அங்கத்துவம் பெற்றிருந்த தமிழ் உறுப்பினர்கள் முஸ்லிம் ஒருவர் தவிசாளராக காரைதீவு மத்தியஸ்த சபையில் இருப்பதை ஏற்க முடியாது எனக் கூறி மத்தியஸ்த சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வந்தனர். இன, மத , அரசியல் வேறுபாடுகளைக் கடந்த நீதிச் சபையை அரசியலாக்கி முஸ்லிம் தவிசாளரை மாற்றி தமிழர் ஒருவரை தவிசாளராய் நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட பல தமிழ் அரசியல் தலைவர்களை ஈடுபடச் செய்ததாக பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தமையும் நாம் அறிந்ததே.

சென்ற 15.11.2015ம் திகதி காரணம் எதுவும் அறிவிக்கப்படாது காரைதீவு மத்தியஸ்த சபையின் புதிய தவிசாளராக திரு. செல்லத்துரை மணிமாறனை ஆணைக்குழு அறிவித்ததுடன் திரு. அபூபக்கர் கலீலுர் றஹ்மானை உப தவிசாளராக பதவியிறக்கம் செய்திருந்தது. தகுந்த எவ்வித காரணங்களும் இன்றி அரசியல் தலையீட்டினால் தவிசாளர் மாற்றப்பட்டதை ஆட்சேபித்தும், நியாயம் வேண்டியும் 22.11.2015 சபை நடவடிக்ககைகளை முஸ்லிம் உறுப்பினர்கள் 10 பேரும் பகிஷ்கரித்தனர். சுமுகமானதும், நியாயமானதுமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை சுமுகமாக இருந்த இரு சமூகங்களுக்கு இடையில் இவ்வாறான நடவடிக்கை இன விரிசலை ஏற்படுத்தும் எனவும் ஊர் பொது அமைப்புக்கள், பள்ளிவாயல்கள், உலமாக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2 comments:

  1. I allways believes and experiences that all srilankan tamils are ltte.compare to them sinhalese are much better.

    ReplyDelete
  2. நான் ஏற்கனவே இந்த இணையதளத்தில் ஏற்கனவே வாடா மாகான முதலமைச்சர் விடயத்தில் குறிப்பிட்டதுபோல்....

    தமிழ் தலைமைகளும், பெரும்பான்மையான தமிழ் மக்களும் (தாங்கள் சிறுபான்மையாக இருந்தாலும் சரி, பெரும்பான்மையாக இருந்தாலும் சரி) "நாங்கள்தான் ஆளப்பிறந்தவர்கள், மற்றவர்கள் எங்களை ஆள முடியாது, நிர்வகிக்க முடியாது" என்று (யூத- இஸ்ரவேலர்கள் போல்) ஆணவம் பிடித்து, குழப்பங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதே இவர்களது பரம்பரையான கொள்கையாகவும், செயற்பாடாகவும் உள்ளது. இவர்களின் இவ்வாறான கொள்கைகளும், செயற்பாடுகளுமே இந்த முத்தான இலங்கை சிதைந்து போவதற்கு காரணம்! ஏன்தான் இவர்கள் இவ்வாறு எல்லாம் எங்களுக்கு மட்டுமே என்று இனவாதம் ஆடுகிறார்களோ தெரியவில்லை...
    ஏனோ இவர்கள் "முள்ளிவாய்க்கால்" முடிவின் யதார்த்தத்தை மறந்து விட்டார்கள், என்று புரியவில்லை!





    ReplyDelete

Powered by Blogger.