Header Ads



துருக்கியின் வரலாற்றில் முதல்முறையாக, பர்தா அணிந்து வழக்கு விசாரணைசெய்த நீதிபதி


முஸ்லிம் பெரும்பான்மை மதச்சார்பற்ற நாடான துருக்கியின் வரலாற்றில் முதல்முறை பெண் நீதிபதி ஒருவர் இஸ்லாமிய பர்தா அணிந்து வழக்கு விசாரணையை நடத்தியுள்ளார்.

ஸ்தன்பூல் நீதிமன்ற அறையில் கறுப்பு அங்கி அணிந்த இளம் நீதிபதி ஒருவர் தலையை மறைக்கும் கறுப்பு பர்தா அணிந்து இருக்கும் புகைப்படம் சமூகதளங்களில் பிரபலமடைந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஒருசில டுவிட்டர் பயனர்கள், "இஸ்லாமிய சட்டத்தின் பிரகடனம்" என்று கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் புகைப்படத்தில் இருக்கும் நீதிபதி மற்றும் அவர் விசாரித்த வழக்கு தொடர்பில் தெரியவரவில்லை.

பெண் நீதிபதிகள் மற்றும் அரச வழக்கறிஞர்கள் பர்தா அணிவதற்கு இருந்த தடையை துருக்கியின் நீதிபதிகள் மற்றும் அரச வழக்கறிஞர்களுக்கான உச்சசபை கடந்த ஜ{ன் மாதம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நீக்கி இரு ந்தது.

இஸ்லாமிய பின்னணி கொண்ட ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (ஏ.கே.பீ.) நாட்டில் இஸ்லாமிய பெறுமானங்களை கொண்டு வர முயற்சிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பெண்கள் பர்தா அணிவதற்கு இருந்த தடையை துருக்கிய அரசு விலக்கியது. எனினும் இந்த தடை நீக்கம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. எனினும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் பர்தா தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

எர்துகானின் ஏ.கே. கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மறு தேர்தலில் அமோக வெற்றியீட்டி தனது 13 ஆண்டு அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த ஜ{னில் நட ந்த தேர்தலில் அந்த கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற தவறிய நிலையிலேயே மறு தேர்தல் இடம்பெற்றது.
      

3 comments:

  1. இஸ்லாத்தில் ஒரு பெண் நீதிபதியாகவே செயல்படவே சட்டமில்லை் இருப்பினும் இந்தப் பெண்னை பாராட்ட வேண்டியது காலத்தின் கடமை.
    When most of our ladies get rid off the hijab/abaya when they come to a big position she has done the opposite. So kudos to her. May Allah make hers and our Eeman strong.

    ReplyDelete
  2. இஸ்லாமிய நாடொன்றில் இப்படியான செய்தி அபூர்வமான இஸ்லாமிய நாடு

    ReplyDelete
  3. ஆஹா! இனி உடனடியாக துருக்கியில் அநீதி அழிந்து, நீதி செழித்தோங்கி தேனாறும் பாலாறும் பாயும்!

    ReplyDelete

Powered by Blogger.