Header Ads



வாக்குறுதியை நிறைவேற்றிய, பைசால் காசீம்


-மு.இ.உமர் அலி-

இறக்காமம்  பிரதேச வைத்தியசாலையின்  பிரதான  விடுதியின்  திருத்த வேலைகளிற்காகவும்,குளிர்சாதனப்பெட்டி,சலவை இயந்திரம் என்பனவற்றின் கொள்வனவுக்குமாக  இம்மாதம் 05ஆம் திகதி   ரூபாய் பதினைந்து லட்சத்தினை பிரதி அமைச்சர் பைசால் காசீம் மத்திய அரசாங்க நிதியிலிருந்து  விடுவித்துள்ளார்.

இதற்கான கட்டளை  கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்கு  சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 10 2015 வெள்ளிக்கிழமை  பிரதியமைச்சர் பைசால் காசீம்   இறக்காமம் மக்களுடனான சந்திப்பொன்றில்  கலந்து கொண்டார். இந்நிகழ்வினைத் தொடர்ந்து இறக்காமம்  பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அவர் வைத்தியசாலையின் குறைகளை கேட்டறிந்தார். மிகவிரைவில் இக்குறைகளை தீர்ப்பதாக வாக்குறுதியும் அளித்தது  அனைவரும்  அறிந்த விடையமாகும்.

1 comment:

  1. Mr.Minister we admire your service to our society.

    ReplyDelete

Powered by Blogger.