Header Ads



ரணிலுக்கு எதிராக சூழ்ச்சி, சஜித்தை பிரதமராக்க திட்டமா..? (இந்திய + சீனா உளவுத்துறைகள் மறைமுக நகர்வு)

-எம்.எம்.நிலாம்டீன்-

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, இந்த அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஐதேக, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் பலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த வாரம் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இது தொடர்பான கூட்டம் ஒன்று பத்தரமுல்லவில் இரகசியமாக நடந்துள்ளது. கூட்டம் பற்றிய தகவல்கள் கொழும்பிலுள்ள இந்திய ரோ உளவுத்துறை முகந்து ரணிலுக்கும் தற்போதுதான் கிடைத்துள்ளது. கூட்டத்திற்கு உதய கம்மன்வில வாசுதேவ நாணயக்கார முன்னாள் ராஜதந்திரி தயான்திலக ஆகியோர் சென்றுள்ளார்கள். இந்தக் கூட்டதிற்கு விமல் வீரவன்ச அழைக்கப் படவில்லை.

ஆனால் பல சட்ட நுணுக்கங்களை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா வழங்கியுள்ளார். இன்னும் வழங்குவார். விசேடமாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களில் பெருமளவானவர்கள் பிரதமர் மற்றும் தேசிய அரசாங்கம் மீது விரக்தியில் இருப்பதால் தினேஸ் குணவர்த்தனவின் திட்டத்தை சுலபமாக நிறைவேற்றேலாம் என்று பார்க்கின்றார்கள்.

அதில் ஐதேக முக்கிய தலைவர்கள் சிலர் இருப்பதாக தெரிகிறது. ஐ.தே.க யில் மங்கள சமரவீர.சஜித் பிரேமதாச, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் பெரும் அதிருப்தியில்தான் உள்ளார்கள். ராஜபக்ச ஆட்சியை ஒழித்து ஐதேக அரசாங்கம் அமைத்துள்ள போதும் அதற்கு ஆதரவு அளிக்காத சிலர் இன்று அமைச்சுப் பதவி எடுத்து அவர்களுக்கு ஏற்றது போல் செயற்படுவதால் இந்த விரக்தி நிலைமைக்கு காரணமாக அமைகின்றது.

புதிய கட்சி தொடங்கி இதனை முன்னெடுப்பதைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து இதனை செய்வது சிறந்ததென இவர்கள் கருதுகின்றார்கள். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் இந்த அரசாங்கத்தை மாற்றி கூட்டாக தேர்தலை வெற்றி கொள்ள இவர்கள் முயற்சிக்கின்றனர். மஹிந்தவின் உதவியை நாடுவது இவர்களின் திட்டமாகும்.

ஆனால் அரசாங்கத்தை கவிழ்த்தால் அடுத்து யாரை பிரதமராக்குவது என்ற குழப்பம் இவர்களைடையே உள்ளது. ஐ.தே.க. தரப்பு சஜித்தையும் நீலத்தரப்பு அனுர பிரியதர்சனயாப்பா. சுசில்பிரேம் ஜெயந்த் பற்றி ஆலோசித்து வருகின்றது. நம்பிக்கை இல்லாப் பிரேரணை மூலமாக நடைபெறவுள்ளது. பகிரங்க வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமாக இதை நாடாளுமன்றத்தில் செய்யலாம்.

சீனாவின் அதிக பணம் பட்டுவாடா நடைபெறவுள்ளது. சிலருக்கு அமைச்சுப் பதவிகள் அதிகரிக்கும் இந்த திட்டம் நிறைவேற அதிகவாய்ப்புள்ளது.  காரணம் சீனா மிக அதிக பணத்தை வாரி இறைக்கவுள்ளது. இலங்கைக்கு வெளியே முதல் கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் நடை பெற்ற பின்னர். கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தகவல்கள் கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் உள்ள உளவு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன உளவு அதிகாரி பீஜிங்கில் உள்ள உள்ளக அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அடுத்த கட்ட நகர்வுகளை பீஜிங் தீர்மானித்து அனுப்பும் வரை தினேஷ் குழு காத்துக் கொண்டுள்ளது.

இந்திய ரோ உஷார்

இலங்கையில் ஆட்சி மாற்றம் சம்பந்தமான இரகசிய ஓன்று கூடல் மற்றும் தகவல்களை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் முகாமிட்டுள்ள உளவு அதிகாரிகள் முகந்து கொண்டு வருகின்றார்கள். அதனால் முன் கூட்டியே ரணிலுக்கு தகவல் கிடைத்து விடும். இந்திய எய்யா டெல் டவர் ஊடாக தகவல்களை இந்திய ரோ ஒட்டுக் கேட்கக் கூடிய நிலை கொழும்பில் உள்ளது.

ரோ உஷார் அடைந்துள்ளது. அரசும் இந்த சூழ்ச்சிக் குழுவின் தொலைபேசியை ஒற்றுக் கேட்கலாம். கொழும்பு அரசியல் கொஞ்சம் சூடு பிடித்துள்ளது.

இந்த 2 அமைச்சர்களுக்கும் எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை நிறைவேறினால் ரணில் அரசு ஆட்டம் கண்டு நீல ஆட்சி அமையும் ஆபத்து வந்துள்ளது. இதைத் தடுக்கும் நோக்கில் அதிபர் மைத்திரி அடுத்த வாரம் அமைச்சரவையை கூட்டவுள்ளர்.

அந்த அமைச்சரவையில் பாரிய அதிருப்தி முன்வைக்கப் படவுள்ளது. அப்போது நம்பிக்கை இல்லாப் பிரேரனை கொண்டு வருவதை ரணில் அண்ணா தடுப்பதில் அதிக கரிசனை காட்டுவாராம். விடுவாரா என்ன.. ஆனால் ஒன்று இந்த அரசு மீது தொடர்ந்து அதிருப்தி நிலை வந்து கொண்டே இருக்கும் .எது எப்படியோ ஒரு உறைக்குள் 2 வாழ்கள் இருக்க முடியாதுதான்.

1 comment:

  1. Evan vandalum muslimgalie nimadiyha irukkavidugal toilet ellam onru thaan west or east

    ReplyDelete

Powered by Blogger.