Header Ads



ஜம்மிய்யதுல் உலமாவுக்கு, சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில்...!

தலைவர்  / செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு - 10
நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!!

அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி. அதை மாத்திரம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! எதிர்வரும் 08.11.2015 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வில் தென்னிந்திய மார்க்க அறிஞர் மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்வது ஆரோக்கியமற்றது என்று கூறி அதனை தவிர்ந்து கொள்ளுமாறு எமக்கு ACJU சார்பில் கடிதம் எழுதியுள்ளீர்கள்.

உங்களின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அவரது 2005 ஆம் ஆண்டு வருகையின் போது ஏற்பட்டது போன்ற சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குழைக்கும் விதமான சம்பவங்கள் (?) ஏற்பட்டு விடும் என்ற காரணத்தை முன்வைத்து, அவரது விஜயம் ஆரோக்கியமற்றதால் அதனை தவிர்ந்து கொள்ளுமாறு பல அமைப்பினரும், அரபுக் மத்ரஸாக்களும், நிறுவனங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் குறிப்பிட்டு, அது தான் ஜம்இய்யாவின் நிலைப்பாடும் கூட என்றும் அறிவித்துள்ளீர்கள்.

முதலில், 2005 ஆம் ஆண்டில் மவ்லவி P.J அவர்களின் வருகையினால் சமூக ஒற்றுமைக்கோ, சகவாழ்வுக்கோ எவ்வித பாதிப்பும் அவர் தரப்பாலோ, அவரை அழைத்து வந்த எமது ஜமாஅத் சார்பாகவோ ஏற்படுத்தப்படவில்லை. வஹியின் செய்திகள் ஆதாரபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சமூக தளத்தில் முன்வைக்கப்பட்டது மாத்திரமே நிகழ்ந்தது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் குர்ஆனிய பண்பாடும், சமூக நாகரீகமும் அறியாத சில அறிவீனர்களால் தான் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு அவரது வீஸா இரத்துச் செய்யப்பட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். மார்க்க பணி செய்வதற்கு இலங்கை வருபவர்கள் எடுக்கு வேண்டிய வீஸா எடுக்காமல் மார்க்க பிரச்சாரம் செய்கிறார் என்று அன்று ஆளும் தரப்பிலிருந்துக் கொண்டு மார்க்கத்தை விலை பேசிய சில அரசியல்வாதிகளும் மார்க்க அறிஞர்களும் (?) செய்த சூழ்ச்சியே அவரது வீஸா ரத்து செய்வதற்கு காரணமாக அமைந்ததே தவிர அறிஞர் மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் (உலவி) அவர்களின் இலங்கை வருகை சக வாழ்விற்கோ சமூக ஒற்றுமைக்கோ எந்தவொரு பாதிப்பையும் உண்டாக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கைக்கு பல கொள்கைகளுடையவர்கள் அவர்களது மக்களால்  அறிஞர்களாக கருதப்படுபவர்களை அழைத்து வருகிறார்கள். உதாரணமாக காதியானி மதத்தைச் சேர்ந்தவர்கள், ஷீஆக்களின் தலைவர்கள், அத்வைதத்தை போதிப்பவர்கள், கப்ருகளை வணங்குபவர்கள் எல்லாம் இலங்கைக்குள் வரவழைக்கப்படுகிறார்கள். அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஆவில் காபிர்கள் என்று அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் இத்தகையவர்கள் இலங்கை வர முடியும் என்றால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை இலங்கைக்கு அழைத்து வருவதை  தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை நீதியானதல்ல, சமூக அக்கறை கொண்டதல்ல, நாகரீகமானதல்ல, ஜனநாயகத்திற்குட்பட்டதுமல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்.

பி.ஜெ அவர்கள் இலங்கை வருவதை எதிர்த்து எச்சரிக்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா காதியானிகளின் தலைவர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள் இலங்கை வருகின்ற நேரங்களிலெல்லாம் இப்படி எச்சரித்ததுண்டா? ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள் இவர்களுக்கு எதிராக எச்சரித்து இலங்கை வருகையை நிருத்துவதற்கு ஜம்மிய்யதுல் உலமா ஏன் பாடுபடவில்லை?

முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக மியன்மாரில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொத்து கொத்தாய் கொண்று குவித்த அஷின் விராதோ தேரர் கடந்த காலங்களில் இலங்கை வர வழைக்கப்பட்டார். இனவாதம் மேலோங்கியிருந்த ஒரு கால கட்டத்தில் இனவாத தீயை பரப்புவதற்காகவே அத்தேரர் இலங்கை கொண்டு வரப்பட்டார். அவர் இலங்கை வருவதை தடுப்பதற்கு நீங்கள் என்ன முயற்சிகளை எடுத்தீர்கள்?

குறைந்த பட்சம் அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டீர்களா? சமூக பொறுப்புள்ளவர்கள் கட்டாயம் செய்தே தீர வேண்டிய இத்தனை பணிகளை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் வருகையை மாத்திரம் தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது. சிந்திப்பீர்களா?

பி.ஜெ விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிக்கை விட்டுள்ளீர்கள். அப்படி அவர் இஸ்லாமிய அடிப்படையின் எந்த பகுதிக்கு மாற்றமாக கருத்து வெளியிட்டார்? அவர் வெளியிட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்களை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் எங்களிடம் தெளிவுபடுத்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா தயாரா? ஒருவரின் கருத்துக்களைப் பற்றிய எந்த வித புரிதலையும் மக்கள் மன்றில் முன் வைக்காது, வெறுமனே இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றம் என்று மாத்திரம் கூறிவிடுவதினால் கடமை முடிந்து விட்டாதாக எண்ணிக் கொள்கின்றீர்கள் போலும். உண்மையில் பி.ஜெ யின் கருத்துக்களில் மார்க்கத்திற்கு மாற்றமான கருத்துக்கள் இருந்தால் அதனை எங்களிடம் நீங்கள் முன் வைத்திருக்கலாமே? ஏன் அதனை செய்ய ஜம்மிய்யா முன்வரவில்லை?

சிங்கள மொழி மூல அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் சந்திப்புக்கான நேரம் தாருங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் வேண்டுகோள் விடுத்த போது, “தலைவர் நாட்டில் இல்லை. வெள்ளிக்கிழமை தான் வருகின்றார் வந்தவுடன் நேரம் தருகின்றோம்.” என்று பொய் சொல்லி காலம் கடத்தி விட்டு இப்போது பி.ஜெ வருகையை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எமக்கு கடிதத்தை அனுப்பி விட்டு கடிதம் படிக்கப்படும் முன்பே ஊடகங்களுக்கு அவசர அவசரமாக குறித்த கடிதத்தை அனுப்பி வைத்ததின் மர்மம் என்ன? இப்போது உங்கள் தலைவர் என்ன ஆனார்? இந்தக் கடிதம் எழுதுவதற்கும், ஊடகங்களுக்கு அனுப்புவதற்கும் தலைவர் நாட்டில் இல்லையே? ஏன் இந்த இரட்டை நிலை? இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் உலமாக்கள் சபை என்று சொல்லிக் கொண்டு இப்படி நயவஞ்சக வேடம் போடுவது நபிகளாரின் வாழ்வுக்கு மாற்றமில்லையா?

08.11.2015 அன்று நடைபெறவுள்ள நிகழ்வானது, திருமறைக்குர்ஆனின் சிங்கள மொழியிலான தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வாகும். இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களின் மனங்களுக்கு படைப்பாளன் அல்லாஹ்வின் செய்திகளை எளிய நடையில், அறிவுபூர்வமாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியின் வெளியீட்டு நிகழ்வாகும். தமிழ்பேசும் மக்கள் மத்தியில் மிகவும் எளிய நடையில் அதிகமான விளக்கங்களுடன் வெளியிடப்பட்ட தமிழாக்கத்தின் சிங்கள மொழிபெயர்ப்பை தான் நாங்கள் வெளியிடுகிறோம். அதன் முக்கியத்துவத்தையும், பெருமதியினையும் அதனை நீங்கள் படித்திருந்தால் அறிந்துக் கொள்வீர்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் அல்-குர்ஆன் தொடர்பாகவும், இஸ்லாம் பற்றியும் பரப்பப்பட்ட அனைத்து தவறான கருத்துக்களும் ஆதாரப்பூர்வமான, அறிவுப்பூர்வமான பதில் அளிக்கப்பட்டே எமது குர்ஆன் மொழியாக்கம் சிறப்புர செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் அல்லாதவர்கள் இந்த மொழியாகத்தை படித்தால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அல்லாஹ்வின் அருளால் கண்டிப்பாக நல்லெண்ணம் கொள்வார்கள். எனவே முஸ்லிம் சமுதாயம் சார்பாக செய்யப்பட்ட இத்தகைய மிக முக்கியமான பணியை முடக்கும் விதமாக அறிஞர் பீ. ஜெயினுலாப்தீன் அவர்களின் இலங்கை வருகையை தவிர்ந்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உங்கள் அமைப்பின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இன்னும் குறைத்து விடும் என்பதை நீங்கள் சிந்திக்க தவறியதை நினைத்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

காலத்தின் அவசியத் தேவை கருதி நடைபெறும் இத்தர்ஜுமா வெளியீட்டினால் சமூக சகவாழ்வு கட்டியெழுப்பப்படும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.  மேலும் அறிஞர் பீ. ஜையனுலாப்தீன் அவர்களின் வருகையையும் சிறப்புரையையும் எதிர்பார்த்து பல்லாயிரக் கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே இந்நிகழ்வை எதிர்க்காமல் தாங்களும் கலந்து அவரது சிறப்புரையை செவியேற்குமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றோம். எல்லம் வல்ல அல்லாஹ் எம் பணிகளை பொருந்திக் கொள்வானாக!

இப்படிக்கு,
ஆர். அப்துர் ராஸிக் B.com
பொதுச் செயலாளர் - SLTJ

28 comments:

  1. யா அல்லாஹ் இந்த உலமா சபையை ஒழித்துக்கட்டி தகுதியானவர்களை அந்த இடத்துக்கு அமைப்பாயாக ஆமீன்

    ReplyDelete
    Replies
    1. ஆமீன்,,

      ஆனால் உலக இறுதி நாளுக்குரிய அடையாளம்...

      தகுதி அற்றோர் கையில்..ஆட்சி அதிகாரம்ம்.....


      "மிக பொருந்துகிறது)

      Delete
    2. Ameen solwadatku awangalukku koottu dua illa. Hmmm...

      Delete
    3. Mufti entru solluringa neethiyanadan
      Ga

      Delete
  2. நியாயமான மறுப்பு
    ஷீஆக்கள் விடயத்தில் இவ்வாறான அவதானம் அற்றுப்போனது ஏனோ?????

    ReplyDelete
    Replies
    1. இன்று இலங்கைக்கு பல கொள்கைகளுடையவர்கள் அவர்களது மக்களால் அறிஞர்களாக கருதப்படுபவர்களை அழைத்து வருகிறார்கள். உதாரணமாக காதியானி மதத்தைச் சேர்ந்தவர்கள், ஷீஆக்களின் தலைவர்கள், அத்வைதத்தை போதிப்பவர்கள், கப்ருகளை வணங்குபவர்கள் எல்லாம் இலங்கைக்குள் வரவழைக்கப்படுகிறார்கள். ///

      அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள். ///

      காதியானிகளின் தலைவர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள் இலங்கை வருகின்ற நேரங்களிலெல்லாம் இப்படி எச்சரித்ததுண்டா? ///

      ஷீயாக்களின் இமாம்கள், பேச்சாளர்கள், போதகர்கள் இலங்கை வருகின்றார்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். நபித்தோழர்களை காபிர்கள் என்று வசை பாடுகின்றார்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை விபரச்சாரி என்று பகிரங்க பிரச்சாரம் செய்கின்றார்கள் இவர்களுக்கு எதிராக எச்சரித்து இலங்கை வருகையை நிருத்துவதற்கு ஜம்மிய்யதுல் உலமா ஏன் பாடுபடவில்லை?///

      இதுக்கெல்லாம் பாடுபட்டிருந்தா அவிங்க டப்பா என்னிக்கோ டான்ஸ் ஆடி டங்குவார் அந்து போயிருக்கும்.

      Delete
  3. சரியான பதில்

    ReplyDelete
  4. இந்த மருப்புரை மிக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அழகாகவும் பண்பாகவும் தனது கருத்தை SLTJ முன் வைத்தததிருக்கிறது. சொல்லப்பட்ட கருத்துக்கல் மிக சரியானதும், தெளிவணதும் ஆகும். ஜமிய்யதத்துல் உளமா ஷ்ீாக்கள் வரும்போதும் , இஸ்லாத்திநதும் முஸ்லீம்களினதும் எதிரி வரும் போது பேசாமல் இருந்த ACJU , PJ வரும் போது எதிர்ப்பது அவர்கள் பற்றிய நம்பிக்கை இன்மாய்யயும் இயலமாமையையும் கோளைத்ததனத்தாயும் காட்டுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பக்கர்சார்பாக நடந்து கொண்டிரிகிறது ACJU

      Delete
  5. Best reply am not a tawheed jamath member.as a nutral person sometimes cant understand the ACJU...mostly they are running by politicians and some group members very pathetic ...as you mentioned shias and ahmadiyas operating publicly ..they couldn't make a single statement like this.

    ReplyDelete
  6. This letter and it's wordings enough to undustand about the group for any with common sence. Why Sugadaasa? Some time back one north Indian Scholar came to Sugatadasa and BBS brought Miyanmar Monk to the same place as result. you people will not limit you activities to your own audiance. It will advertise evry where. What a non Muslim will undustand by simply reading a direct translation who does not have any idea about Islam. Why you cant use technology so that he can speak directly from India. Please undustand that Miyanmar monk was backed by the government and he did not adress Muslims. Even Qadiysni, Shiya, etc will not target and make divisions like you people are doing.

    ReplyDelete
    Replies
    1. what do you want to say ? say it in Tamil please

      Delete
  7. Brilliant, excellent and very well said Br. A. Raziq. May Allah's exceptional blessings be abundantly bestotwed upon you and the devoted SLTJ team...

    ReplyDelete
  8. இன்று இலங்கைக்கு பல கொள்கைகளுடையவர்கள் அவர்களது மக்களால் அறிஞர்களாக கருதப்படுபவர்களை அழைத்து வருகிறார்கள். உதாரணமாக காதியானி மதத்தைச் சேர்ந்தவர்கள், ஷீஆக்களின் தலைவர்கள், அத்வைதத்தை போதிப்பவர்கள், கப்ருகளை வணங்குபவர்கள் எல்லாம் இலங்கைக்குள் வரவழைக்கப்படுகிறார்கள். அண்மையில் காதியானிகள் தமது குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை வெளியிட்டார்கள். போராக்கள் யாழ்பானத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டினார்கள். மேலும் ஓட்டமாவடியில் ஷீஆக்களின் மத்ரஸா நடைபெறுகின்றது. குறித்த மத்ரஸாவில் இருந்து 60 க்கும் அதிகமான ஷீயா மத அறிஞர்கள் வெளியேறி நாடு முழுவதும் ஷீஆ கொள்கையை பரப்புகின்றார்கள். இஸ்லாமிய ஷரீஆவில் காபிர்கள் என்று அனைத்து சுன்னத் வல் ஜமாஅத் தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் இத்தகையவர்கள் இலங்கை வர முடியும் என்றால் மார்க்கத்தை அதன் தூய வடிவில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் போதிக்கும் ஒரு மார்க்க அறிஞரை இலங்கைக்கு அழைத்து வருவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை நீதியானதல்ல, சமூக அக்கறை கொண்டதல்ல, நாகரீகமானதல்ல, ஜனநாயகத்திற்குட்பட்டதுமல்ல என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். - super response to ACJu

    ReplyDelete
  9. Pj issued statment last year rgarding black magic not any proof in the quran .said?

    ReplyDelete
  10. தவறுதான். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை ஒரு இஸ்லாமிய இயக்கமாக கருதி அந்து ஜம்மிய்யதுள் உலமாவின் வேண்டுகோளை புரிந்து கொள்ளும் என்று acju கருதியது தவறுதான் . ஷீயாக்களை போல , காதியானிகளைப் போல ஓர் அகீதாவுக்கு முரண்பட்ட இயக்கமாக sltj இன்று மாறியுள்ள நிலையில் அவர்களையுள் அதே தரத்தில் வைத்தே பார்த்திருக்க வேண்டும்.

    இந்த இயக்கம் ACJU க்கு கட்டுப்பட்ட ஓர் இஸ்லாமிய இயக்கம் அல்ல, மாற்றமாக தமக்கே உரிய ஒரு தனிபாதையை எடுத்துகொண்டு அது எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்ற அறிவும் இன்றி, குருட்டுத்தனமாக பி ஜெய்னுலாப்தீன் மௌலவியையும் அவரது இயக்கத்தையும் பின் பற்றி செல்லும் இயக்கம் தான் இது என்பதை ACJU வும் பொது மக்களும் புரிந்து கொள்ள இது ஒன்றே போதும். அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமியராக இருந்திருப்போமேயானால், குரான், ஹதீஸ் சொல்லப்படும் போது காது தாழ்தி கேட்டிருப்போம்,,
      க---கள் தூற்றியிருக்கமாட்டோம்...எதிரிகளைப் போல்,,

      அத்தோடு ACJU செய்கின்ற , சொல்கின்ற அத்தனையையும் ஏற்பார்களோ என்னவோ...!!

      Delete
  11. அண்மையில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பி.ஜெயனுலாப்தீன் தொடர்பான தீர்ப்பை கருத்தில் கொள்வது அவசியமானதும் கட்டாயமானதுமாகும்.
    [[ - இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக எழுதியும், பேசியும், பிரச்சாரங்கள் செய்தும் முஸ்லிம் சமுதாய மக்களை வழிகெடுத்து வருகிறது TNTJ என்னும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் இயக்கம். அந்த அமைப்பின் ஸ்தாபகர் PJ எனும் பி.ஜெயனுலாப்தீன்.
    .
    இந்த கூட்டம் கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாத்துக்கும், அல்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் மாற்றமாக பேசி வருகின்றனர்.
    .
    மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், சஹாபாக்கள், இமாம்கள், இறைநேசர்கள் போன்ற இஸ்லாமிய பெரியார்களை கேவலமாக பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.
    .
    இவர்களின் பித்னா (குழப்பம்) அதிகரிக்கவே தமிழ்நாட்டு முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக சமீபத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். மேலும் இந்த வழிகேடர்களை தடை செய்யுமாறு கூறி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.
    .
    எனவே, முஸ்லிம்களின் கோரிக்கைக்கு இணங்கி, PJ எனும் பி.ஜெய்னுலாப்தீனின் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை திரட்டி, 16-06-2015 ஆம் திகதி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் அவசர ஆலோசனை கூட்டத்தில் சமர்பிக்க 8 பேர் கொண்ட உலமாக்கள் குழு நியமிக்கப்பட்டது.
    .
    இதற்காக 8 பேர் கொண்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உலமாக்கள் குழு நியமிக்கப்பட்டது. அவர்களின் விபரங்கள்:
    1. மௌலவி அப்லளுள் உலமா ஷெய்க் அப்துல்லாஹ் (ஜமாலி) M.A சென்னை
    2. மௌலவி அன்வர் பாதுஷா (உலவி) M.A, M.Phil, Phd.
    3. மௌலவி சைபுதீன் (ரஷாதி) பெங்களூர்
    4. மௌலவி காஜா மொஹினுத்தீன் (பாகவி) மேலப்பாலயம்
    5. மௌலவி சதீதுத்தீன் (பாகவி) M.A Phil. சென்னை
    6. மௌலவி அப்துல் அஸீஸ் (பாகவி) கோவை.
    7. மௌலவி நீடூர் இஸ்மாயில் (பாகவி)
    8. மௌலவி ஹமித் பக்ரி (மன்பஈ) காயல்பட்டிணம்
    .
    இந்த 8 பேர் கொண்ட உலமாக்கள் குழு சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கீழ்காணும் தீர்மானத்தை நிறைவேற்றியது:
    .
    "(TNTJ) தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பின் அமைப்பாளர் P.J என்பவர் இஸ்லாமிய கொள்கைக்கு விரோதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகெடுத்து வரும் காரணத்தால் இவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார்" என்று இச்சபை அறிவித்து "இவரை பின்பற்றியோர் தவ்பா செய்து (பாவமன்னிப்பு) தேடி மீள வேண்டும்" என இச்சபை பத்வா (மார்க்க தீர்ப்பு) வெளியிட்டுள்ளது.
    .
    குறிப்பு: இச்செய்தியை உலகிலுள்ள அனைத்து தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு அறிவிக்கும்படியும், இந்த வழிகெட்ட கூட்டத்தாரையும் அதன் ஸ்தாபகர் PJ என்பவரை பற்றியும் முஸ்லிம்களுக்கு தெரிவித்து, முஸ்லிம்களின் ஈமானை பாதுக்காக்க உதவுமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுள்ளது-]]
    ஒருவரை பற்றி மற்றொருவர் ஓர் இடத்தில் கருத்துச் சொல்வது தவறாக இருக்கலாம், ஒருவரை பற்றி பலர் பல இடங்களில் விமர்சித்தால் அதை புறந்தள்ள முடியாது.
    “அசின் வந்த போது எதிர்க்காதவர்கள்” என்று கேள்வி அபத்தமானது, அசின் விராது வந்ததால் முஸ்லிம்களின் ஒற்றுமை வலுவடைந்ததே அது நலிவடைந்து விடவில்லை மாறாக PJ யின் வருவதற்கு முன்பாகவே முஸ்லிம்களுக்குள் பிரச்சினைகளும் பிளவுகளும் தோன்றிவிட்டன. ஜம்யியதுல் உலமா சபை PJ யுடன் மேடை அமைத்து விவாதம் செய்ய வேண்டும் என்று அறிவிலித்தனமான பினூட்டங்கள் எழுதுகின்றனர். குர் ஆனில் அல்லது ஹதீதில் இவ்வாறு மேடை அமைத்து விவாதம் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது தெரியாது இருந்தால் கூறுங்கள் நானும் அறிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  12. அல்லாஹும்ம பாரிக் Mr.Raziq
    நான் நீ என்ற அதர்மத்தை விட்டு இஸ்லாத்தை அதன் தாய்மையான வடிவில் புரிந்துகொள்ள நீங்களும்( acju)சேர்ந்து வாருங்கள்.
    Acju கற்ற இஸ்லாம் ஆராய்ச்சிகள் இன்றி கற்றவைகள் அப்போது அந்த வசதிகள் இருக்கவில்லையே ? இப்போது நீங்களும் சேர்ந்து ஆராயலாம் இல்லையா? .

    ReplyDelete
  13. இப்படி எல்லாக் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து எதிர்க்கின்றார்கள் என்றால் நாம் இதிலிருந்தும் ஒரு படிப்பினை பெற வேண்டியிருக்கு
    இறைவனின் ஜோதியை வாயால் ஊத்தி அணைக்க நினைக்கிறார்கள் அப்படியெல்லாம் ஊத்தி அணையும் ஜோதியல்ல என்பது இவர்களுக்குத் தெரியாது

    ReplyDelete
  14. ஒரு விதத்தில் சொல்லப் போனால் இது "இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி நாங்கள்தான்"
    என்று சொல்லிக்கொள்ளும் அ. இ. உ. சபைக்கு ஏற்பட்ட கௌரவப் பிரச்சினை என்றே எனக்குப் படுகிறது.

    எப்படியென்றால்,அல் குர்ஆன் பற்றிய அறிமுகத்தை இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து, அது பற்றிய அவர்களது மனங்களிலுள்ள பிழையான கருத்துக்களை சீர்செய்வதற்கு தார்மீகக் கடப்பாடுடைய அமைப்பு என்ற வகையில், இந்த 'ஜம்ப'ஸ்தர்கள் எப்போதோ, செய்திருக்க வேண்டிய ஒரு வேலையை,

    இப்போது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இளைஞர்கள் கையிலெடுத்து - அனேக சிரமங்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக செய்து முடித்து, இன்னும் ரெண்டொரு நாட்களில் வெளியிடவும் முற்பட்டிருகிறார்களே. என்பதை பொறுக்க முடியாத பொச்சரிப்புத்தான், உலக்க சபையிலிருக்கிர மோட்டு / மாட்டு மவ்லவிகள், இப்படியான பொறுக்கித்தனத்தில் ஈடுபட காரணமாகிறது.

    "தானும் படுக்க மாட்டான். தள்ளியும் படுக்க மாட்டான்" கதைதான்.

    ReplyDelete
  15. ACJU , SLTJ மற்றும் பின்னூட்டம் செய்பவர்களின் கவனத்திற்கு:
    எல்லா கருத்துக்களும் அழ்ழாஹ்வினால் விசாரிக்கப்பட்டே தீரும். ஊர்ஜிதம் செய்யாமல் விமர்சிப்பவர்கள் அழ்ழாஹ்வை பயந்து கொள்ளவும்.

    ReplyDelete
  16. பத்வா கொடுக்கும் மகான்களே மறுமை பற்றி பயந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சுவர்கம் Bookingல இருக்குர மாரி நினைச்சு இன்னொரு முஸ்லிம்க்கு பத்வா கொடுக்குரத நிப்பாட்டுங்க முதல் நீங்க சுவர்கம் போக பாருங்க பிறகு மற்றாக்களுக்கு வழி சொல்லலாம்

    ReplyDelete
  17. I am not a member or supporter of sltj.but I am watching the activities of acju for last few years.either they are working for politicians or the people like kabr worshippers...and ahmadiyas..they will not acting against these groups they are publicly operating in pasyala and other places.but anything from sltj...they are quickly comming for actions. Allah knows who operating them.

    ReplyDelete
  18. All these happened because of Abdul Rasik (SLTJ - Secretary) He is the one who started the controversy over Buddha. (Allegedly he claimed that Buddha consumed human flesh) A childish misinterpretation of Buddhist scriptures. (We all know this stirred a controversy among Buddhist brothers) And now BBS knows PJ is the founder of SLTJ and the leader of Abudl Rasik. Therefore Jamiyahtul Ulalama seeing the coming of PJ could revive (Insha Allah will not) this olden rotten issue among our Buddhist brothers, which can lead to other consequences. And in a way they are trying to alienate Muslim people from these kind of unnecessary issues. Following the clear defeat in the elections, it is apparent that, the BBS is longing for the right time to get back at us. So it is advisable to be cautious about the outcomes of these events. PJ has done some mistakes in his tharjuma and they have not been clarified yet. I am a humble Thawheed supporter anyway.

    ReplyDelete
  19. Dear Foolish and bad followers, Pls try to understand by your own mind and stand gently...do not try to sound what your Sheikhs...given to your minds....
    TRUE NEVER DIE.....this ACJU is always liars....

    ReplyDelete

Powered by Blogger.