Header Ads



பால்மா விலை குறைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் பிரதானமானது விவசாயம். ஆகவே நுகர்வோருக்கு சிறந்த அறுவடைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நிதியரமச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி விவசாயத் துறையை ஊக்குவிப்பதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தத் துறையில் காணப்படும் பிரதான பிரச்சினையாக களஞ்சியப்படுத்தல் பிரச்சினை காணப்படுகிறது.

ஆகவே, இதற்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக புதிய களஞ்சியசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

அந்த வகையில் மன்னார் பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்று அமைக்கப்படுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை உள்நாட்டு பால்மா 400 கிராம் பெக்கட்டின் விலை 325 ரூபாவில் இருந்து 295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 30 ரூபாவினால் பால்மா விலை குறைக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தும் போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.