Header Ads



ஜம்மியத்துல் உலமாவுக்கு, தவ்ஹீத் ஜமாத் வழங்கிய கடிதத்திற்கான சில தெளிவுகள்..!

-Safras Arham-

SLTJ யினால் ஜம்இய்யாவிற்கு அனுப்பட்ட கடிதத்திற்கு விளக்கம் கோரி ஜம்இய்யாவை நான் தொடர்பு கொண்டேன். அவர்கள் சில தெளிவுகளை அழகாக முன்வைத்தார்கள். அதனை பொது மக்கள் புரியும் வண்ணம் மீடியாக்களுக்கு அனுப்பிவையுங்கள் என கேட்டுக் கொண்ட சமயம் அவர்கள் கூறியதாவது நாம் அவர்களுடன் விவாதிக்கவோ தர்க்கம் புரியோ கடிதம் அனுப்பவில்லை மாறாக  நாட்டு மக்களின் ஓற்றுமையை கவனத்தில் கொண்டு ஒரு உபதேசமாககத்தான் அவர்களுக்கு அனுப்பிவைத்தோம் எனவே கடிதத்திற்கு கடிதம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என கூறினார்கள்.

உண்மையில் ஜம்இய்யா எமது தாய் சபை அவர்கள் ஒன்று செய்வார்களாயின் அது தூர நோக்குடன்தான் செய்வார்கள். அவர்களின் கதையில் எனக்கு விளங்கியது இவர்கள் சிறு பிள்ளைகள் அப்பாவிகள் விளப்பமில்லாத குழப்பவாதிகள் இவர்களுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை என்பதாக.

தொடர்ந்து அவர்களிடம் நான் பெற்ற தெளிவுகள்.

             2005ஆம் ஆண்டில் பீ.ஜே அவர்களின் வருகையால் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டதால்தான் அவர்களது வீஸா இரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பட்டார்கள் என்பது யாவரும் அறிந்த பகிரங்க விடயம்தானே

             மேலும் ஜம்இய்யா காதியானிகள் விடயத்தில் பாரிய முயற்சிகள் செய்துள்ளது. 2007 ஆண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள், துறைசார்ந்தவர்கள், அரபு மத்ரஸா உஸ்தாதுமார்கள், முக்கிய நிறுவனங்கள், சட்டவல்லுனர்கள் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் மாநாடொன்றை ரன்முத்து ஹோட்டலில் ஏற்பாடு செய்து நடாத்தி அதில் முக்கிய தீர்மானங்களையும் எடுத்துள்ளது. அது இன்றுவரைக்கும் மக்கள் மத்தியில் சொல்லப்பட்டுக்கொண்டுதான் வருகின்றது. அந்த தீர்மானங்கள் பள்ளிவாயல்களில் கூட பதாதைகளாக தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும் இன்னோரன்ன பல விடயங்கள் இது விடயமாக மேற்கொண்டவண்ணம் உள்ளது.

             ஷியாக்கள் விடயமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு உண்டுபன்னுவதற்காக மனாகிபுஸ் ஸஹாபா என்ற தலைப்பில் பல கருத்தரங்குகள் ஜம்இய்யாவின் கிளைகள் ரீதியாக நடாத்திக் கொண்டிருக்கின்றனர். இது விடயமாக தேசிய  மாநாடொன்றையும் கடந்த 2015.05ஆம் மாதம் நடாத்தியும் உள்ளது. அது மட்டுமல்லாமல் ஈரான் நாட்டு தூதுவரையும் நேரடியாக சந்தித்து உங்கள் நாட்டு கலாசாரத்தை எம் நாட்டில் நுழைவிக்க முயற்சிக்க வேண்டாம் என பகிரங்க அறிவித்தல்களும் வழங்கியுள்ளார்கள்.

             அசின் விராது வந்த விடயத்தில் பல நடவடிக்கைகள் ஜம்இய்யாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் அந்நேரத்தில் அவைகளை வெளிப்படுத்துவதற்குன்டான கால நிலைமைகள் இடம் கொடுக்கவில்லை. மேலும் அவர்களின் வருகையில் அரசியல் பின்னணிகளும் இருந்தது யாவரும் அறிந்த விடயம். ஜம்இய்யா என்று வரும்போது அது ஒட்டுமொத்த அனைத்து முஸ்லிம்களையும் சாரும் என்பதால் மிக நிதானமாக தூரநோக்குடன் நடக்க வேண்டிய கட்டாய நிலைப்பாட்டில் உள்ளது.

எனவே சுமார் 90வருடம் சம்பளமில்லாமல் மக்களுக்கு நல்ல பல சேவைகளை புரிந்து கொண்டிருக்கும் இச்சபையின் பின்புலங்களை விளங்காமல் சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது மடத்தனத்தின் உற்சகட்டமாகும். அவர்களின் சேவைகள் மீடியாக்களில் வருவது அறிது ஏனெனில் அவர்களின் செய்யும் ஒவ்வொரு சேவைகளையும் காட்டி  பணம் வசூலிக்க வேண்டிய தேவையில்லை. அதாவது பணத்திற்காக சேவை செய்பவர்கள் அல்ல மாறாக அல்லாஹ்விற்காக சமூக நலன்கருதி பல பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனை கரைத்து அந்த சிறு பிள்ளைகளின் வாயில் ஊற்றி குடிக்கவைத்து விளங்க செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அவர்களின்  குழப்பத்திற்கு உடைந்தையாக இருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

28 comments:

  1. எனக்கு புரியவில்லை

    PJ இந்த நாட்டுக்குள் வந்தால் அப்படி என்ன சட்ட ஒழுங்கு அல்லது முஸ்லிம்களுக்குள் பிளவு ஏற்படும்?

    தெளிவு இல்லை ஆராய்ந்து பார்த்தால் எல்லோரிடமும் காழ்ப்புணர்ச்சி காணப்படுகிறது.

    முஸ்லிம்களின் பரம எதிரிகள் இந்த நாட்டுக்குள் இயக்கம்களாக நுழைந்து எம்மவரின் ஈமான்களை குழப்புகிறார்கள் இந்த ACJu என்ன செய்தது?

    இந்த செய்தியை பார்த்தால் ACJu இன்னும் பக்குவமான வயதுக்கு வரவில்லை.

    இவர்கள் பாவித்திருக்கும் சொற்கள் எல்லாம் இன்னொருவருடைய மனதை புண் படுத்தும் அளவில் பாவித்திருக்கிறார்கள்

    இதன் மூலம் நாம் புரிந்து கொண்டது “ACJUயிடம் சகிப்புத்தன்மை இல்லை

    அதனால் இந்த சமுகத்தை நடத்துவதற்கு இவர்கள் அருகதை அற்றவர்கள்”

    காழ்ப்புணர்ச்சியின் காரணமாக உச்சக்கட்டமான வார்த்தைகளை பாவித்து கூறப்பட்டிருக்கு " கரைத்து அந்த சிறுபிள்ளைகளின் வாயில் ஊற்றி குடிக்கவைத்து விளங்க செய்யுங்கள்"

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், காசிக்காக வேலை செய்யவில்லையாம்ம்,,,

      ஆனால் குரோத மனோபாங்கு காண்டப்படுகின்றது ACJU வில் அவ்வறிகையை வெளியிட்டவர்களிடத்தில்....,
      காதியானி, அத்வைதம், ஷியா போன்றவர்களின் பேச்சாளர்கள் வரும் போது இவ்வாறு அறிக்கைவிடாது இப்போது மட்டும் விடக் காரணம் ....??? ச்கிப்புத் தன்மை இன்மை...!!! அல்லாது வேறெதுவாக இருக்கக்கூடும்

      அவர்கள் வந்தால் வந்துவிட்டு போகட்டும் அது குறைந்துவிடப் போகிறது....?? சிறுபிள்ளை தனம் கொண்டவர்களுக்கு...??

      PJ அப்போது வந்த போதும் , தற்போதும் பிரச்சினையை உண்டு ப்ண்ணுகிறவர்கள் இவர்ர்ர்கள்.....,, ஆனால் பழி மட்டும் அவர் மேல்..

      Delete
  2. Muzammil brother also dont understand.muzammil will wake up in the future.insha allah

    ReplyDelete
  3. Arham ji allaj than padukka ka vendum entha pj and evonoda sertha koottaggaliyum eppa evanugal kurhan matrum hadees thavirtha ijma kiyas ellamal vala arambippanugalo evaugal poi serum edam solla koodathu entha pj ku theriyathu avan eppadi sutrunalum ethavathu oru math hab lathan erikiran ndu so be carefull

    ReplyDelete
  4. 2005 இல் P.J. வந்ததால் அவரால் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை, இன்று போன்று அன்றும் அவருக்குத்தான் கல்லடித்துப் பிறச்சினை உண்டாக்கினார்கள்! அவரை எதிர்கொள்ளத் திரானியில்லாத லெப்பைகள் காற்பணர்ச்சியினால் தான் குழப்பினார்கள்.

    ReplyDelete
  5. Reason for all these could be Mr. Abdul Rasik (SLTJ - Secretary). He is the one who started the controversy over Buddha. (Allegedly he claimed that Buddha consumed human flesh) A childish misinterpretation of Buddhist scriptures. (We all know this stirred a controversy among Buddhist brothers) And now BBS knows PJ is the founder of SLTJ and the leader of Abudl Rasik. Therefore Jamiyahtul Ulalama seeing the coming of PJ could revive (Insha Allah will not) this olden rotten issue among our Buddhist brothers, which can lead to other consequences. And in a way they are trying to alienate Muslim people from these kind of unnecessary issues. Following the clear defeat in the elections, it is apparent that, the BBS is longing for the right time to get back at us. So it is advisable to be cautious about the outcomes of these events.

    ReplyDelete
  6. ஜம்யதுல் உலமா இந்த சமூகத்தை வழி நடத்துபவர்கள், மேலும் தூர நோக்கோடு செயல்படுபவர்கள், மேலும் பல்லின சமூக மக்களோடும் ஒற்றுமையாக வாழ வழி கோர்பவர்க்ள். எது எப்படியோ PJ யின் வருகை மூலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தால் சரிதான், முஸ்லிம் சமூகம் பட்டுத்திருந்தும் சமூகமாக மாறாமல் இருந்தால் சரிதான்.

    ReplyDelete
  7. உண்மையில் நீங்கள் சொல்வது போன்று இது வெறும் கால்புனர்ச்சியே தவிர வேறொரு காரணமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை....
    இதிலொரு விடயம் என்னவென்றால் இதை எதிர்ப்பவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக நடந்துகொண்ட ஆசாத்சாலி, பொதுபலசெனா
    ACJU, மற்றும் கபூர் வணங்கிகள்... அல்லாஹ் அக்பர்,,,

    ReplyDelete
  8. Awarkal sirupillaykal thaan. siruwarkalay cambaala adichchi thaan welakkam solla wendrum

    ReplyDelete
  9. கூலிக்கு வேலை செய்பவர் கடிதம் கொடுத்து அறிக்கை வடுமளவுக்கு முட்டால்தனமான ஒரு முகாமைத்துவம் முஸ்லிம்களுக்கு தேவைதானா.?

    ReplyDelete
  10. Confessipn of a power hit institution...ACJU in Peril

    ReplyDelete
  11. அகில இலங்கை சோனக மதகுருமார் சங்கம் அரிய பெரிய சேவை ஒன்றை செஞ்சிட்டாங்களாம்!

    ஷீயாக்காரன்ட ஊடுருவல் பத்தி பேச நாக்கு எழும்பாது....

    பொது பல சேனாக்கு எதிரா வீதிக்கு வந்து எதிர்ப்பு காட்ட இடுப்பு எலும்பு எழும்பாது....

    நாறப்பயலுகளான சோனக பெயர்தாங்கி அரசியல்வாதிகள் வங்கி கொள்ளை அடிச்சநேரம், ஊரான் மனையாளை திருடிக்கொண்டு ஓடிய நேரம், மஹிந்தைக்கு வால் பிடிச்ச நேரம் அத பத்தியெல்லாம்
    பேச வாய் உசும்பாது....

    அசின் விராது வந்த நேரம் கூட எழுத முடியாத கடிதத்த பீஜே க்கு எதிரா எழுதிட்டாங்களாம்.

    ஆண்டவனுக்காக உங்க சங்கத்த கலைங்க, போதும்!

    ReplyDelete
  12. Acju seyya wendiya wealayai siru pillaigal (sltj)seigirade enra awamanathil pulambum pulambal.uraikattum acju itku.awamanam awamanam

    ReplyDelete
  13. ஒரு தனி நபரின் வருகைக்கு இவ்வலவு பெரிய இயக்கம் பயப்படுகின்றது என்றால் காரனம் அசத்தியம் எவ்வளவு பெறிதாக தெரிந்தாலும் சத்தியத்தின் முன் அது அழியக் கூடியதே

    அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர் (74:51,52)

    ReplyDelete
    Replies
    1. இவர் வாரதால எவரும் பயப்படல இவர் என்ன பூதமா பிரச்சினை வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அவ்வளவு தான் குர்ஆன் ஹதீஸ் பேசும் எமது பின்னோட்டங்களும் அதனடிப்படையில் அமைய வேண்டும் மறுமையில் இதுபற்றியும் விசாரிக்க படும் என்று தான் அவை சொல்கின்றன

      Delete
  14. உலமாக்கள் மார்க்க அறிஞர்கள் என்கின்ற போர்வையில் வழிகேடுகளை போதிக்கும் போது அவர்கள் மேலுள்ள பக்தியின் காரணமாக கண்மூடித்தனமாக அவர்களுக்காக ஏன் வீணாக வாதாடுகிறீர்கள் உண்மையையும் பொய்யையும் பிரித்தறியும் பகுத்தறிவு ஒவ்வொருவருக்கும் இறைவனால் வழங்கப் பட்டிருப்பதை மறந்து விடாதீர்கள் உங்கள் முயற்சிகள் ஹக்கை/சத்தியத்தை நிலைநாட்டுவதட்காய் இருக்கட்டும்

    ReplyDelete
  15. பீ ஜே அவரால் எழுதப்பட்ட அல்குரான் மொழிபெயர்ப்பு இன்னொரு மொழிக்கு மொழிபெயர்த்து வெளியிடும் போது ,அதில் அவர் வந்து கலந்து கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது. எதற்கு எல்லோரும் பயப்படுகிறார்கள்.!!!
    இதற்குத்தான் என்று ஒரு நியாயமான காரணத்தை சொன்னால், அதனை பரிசீலித்துப் பார்க்கலாமே.. ..
    ஆசாத் சாலி , பொதுபல சேனா, மற்றும் கப்ரு வணங்கிகளான: ஷீயாக்கள் , போராக்கள், தரீகாக்கள் இவர்கள் அனைவருமே இஸ்லாத்தின் பெயரை கலங்க படுத்துவதிலும், முஸ்லிம் சமுகத்தை எந்த அளவுக்கு அல்குரானை விட்டும் தூரப்படுத்தி, அதிலிருந்து அந்நியப்படுத்த முடியுமோ , அதில்தான் அக்கறை செலுத்தி அறிக்கை விடுவார்கள். இது நாடறிந்த உண்மை . இதில் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை. இவர்கள் அறிக்கை விட வில்லை என்றால் தான் அதிசயம்......
    ஆனால் இந்தவிடயத்தில் ஜம்மியத்துல் உலமா சபை அறிக்கை விட்டதை நோக்கும் போது வியப்பாக இருக்கிறது. அவர்களும் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு கூட்டத்துடன் தொடர்புடையவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை முஸ்லிம்களில் 90% மானோர், தப்லீக் ஜமாஅத் , தவ்ஹீத் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாம் மற்றும் D A போன்ற அமைப்புகளை ஆதரிக்கக் கூடியவர்கல். இந்த ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் , இலங்கையில் உள்ள எந்த பள்ளியிலும் தமது மார்க்க பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என அன்று உலமா சபையினால் அறிவிக்கப் பட்ட அறிக்கைகள் இன்றும் அதிகமான பள்ளிவாசலில் தொங்க விடப்பட்டுள்ளன. இது இப்படி இருக்கையில் , இஸ்லாத்தின் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிகளின் எதிரிகள் என்று அனைவராலும் அறியப்பட்ட அசின் விராத், ஷீயா முல்லாக்கள், காதியானிய தலைமைகள் வந்த போதெல்லாம் அறிக்கை விடாமல் PJ க்கு மட்டும் எதிர்த்து அறிக்கை விடும் அளவுக்கு உலமா சபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறுபிள்ளைத்தனமான செயல் அவர்களின் குறுகிய சிந்தனைப் போக்கை வெளிப்படுத்துகிறது, இலங்கை முஸ்லிகளை வழிநடாத்துவதர்க்கான ஆளுமை , தூர நோக்கு, செயற்திட்டங்கள் எதுவுமே அவர்களிடம் இல்லை என்பதை தோற்றுவிக்கின்றது.

    ReplyDelete
  16. sahodararkale izuvaraikum sri lanka varalatril jammiathul ulamavukku kuraikooriththiriivazu podubala senavum thawheed jama attumthan ,

    thayavu seyzu allahvukku payandu ulamakkalai kuraikooramal ungaludaya dahwavai seyyungal. markattin ungaludaya sonda karuttai vaikkamal allah vukku payandukollungal

    ReplyDelete
  17. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு வேண்டு கோள்! நாளை ஏதும் அசம்பாவிதம் நடந்த பின் யோசிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  18. PJ வந்தால் குழப்பம் நிகழும் என்பது அல்ல பிரச்சினை.
    துரதிஷ்டமாக அவரது மார்க்க விளக்கங்களை பின் பற்றும் நபர்கள் கூட ஒரே இயக்கமாக ஒரு குறிப்பிட்ட காலம் சேர்ந்திருந்த்ததில்லை.
    சிறிது காலத்தில் இரண்டாக, மூன்றாக.......என்று பல இயக்கங்களாக பிரிந்து விடுகிறார்கள்.
    தப்லீக்கோ, ஜமாத்தே இஸ்லாமோ, ஏனைய இயக்கங்களோ உலகலாவிய ரீதியில் ஒற்றை இயக்கம் தான்.
    ஆனால் இவர்களை பொறுத்த வரையில் நாட்டுக்கு நாடு ஏராளமான இயக்கங்கள்.
    இந்த ஒன்றே போதும் விளங்கிக் கொள்ள கூடியவர்களுக்கு.

    ReplyDelete
  19. ACJU...always cheating the public and this is one if it...

    ReplyDelete
  20. Oh really.....mr. abul faasith...
    Same like your name you are vommiting bad things at the people....in Islam..
    May be you dont know the real of Tawheed.....shame on you....go and learn about them and their activities.....dont listen whatever telling by your masterminders...Allah may help you!!

    ReplyDelete
  21. But, don't write some thing pointless.
    Wrire the explanation on this matter if u have

    ReplyDelete

Powered by Blogger.