Header Ads



இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக ஜெமீல்

-எம்.வை.அமீர்-

கிழக்குமாகாணசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பு முன்னாள் குழுக்களின் தலைவரும் உறுப்பினரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார்.  

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை அமைச்சர் றிசாத், ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ACMC அதிகார பங்கீகாரம் வரவேற்கதக்க விடயமாகும். இருந்தபோதிலும் அக்கரைபற்று புறக்கணிக்கபடுவது vethanaikkuriya விடயம். நீச்சயமாக ACMC இன் எதிர்காலம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை

    கடந்த காலங்களில் அக்கரைபற்று அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்ட போதுதான் அங்கு தனித்துவமான தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது .

    அக்கரைபற்று மக்கள் இத்தலைமையை நிராகரிக்கின்ற போதில் ஏனைய முஸ்லிம் தலைமைகள் அக்கரைபற்று மக்களை கண்ணிய படுத்த தவறும் பட்சத்தில், சரித்திரம் மீட்கப்பட வேண்டும் என்பது மனித நேயம் கொண்ட யாவரும் ஏற்க கூடிய நியாயம் ஆகும்.

    தலைமைகளே சிந்தியுங்கள் !!

    SLMC இன் ஆரம்ப தளமும் அக்கரைபற்றுதான் அதாஉல்லாவின் காங்கிரஸ் இன் ஆரம்ப தளமும் அக்கரைபற்றுதான்,

    மயிலுக்கு ஆரம்ப தளமாக அமைய போஹின்ற வேளையில் அதனை "வெண்ணை திரண்டு வரும் பொது தாழி உடைய்ந்த " கதையாக்கும் வேளையோ இது...?

    மயிலின் அதிகாரபரவலாக்கலா!
    அஹங்கார பரவலாக்கலா!
    அக்கரைபற்று புறக்கணிக்கப்பட்டது ஏன்..?

    ReplyDelete

Powered by Blogger.