Header Ads



பாராளுமன்றத்தில் அசிங்கமான கேள்வி கேட்டு, வாங்கிக்கட்டிய புத்திக்க

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண முன்வைத்த கேள்வியொன்றுக்கு எதிர்க்கட்சி மாத்திரமன்றி ஆளுங்கட்சியும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

புத்திக பதிரண ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் .இவர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றை முன்வைத்திருந்தார். பாடசாலைகளில் ஆசிரியர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான மாணவ, மாணவிகள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் குறித்த பட்டியலை சமர்ப்பிக்குமாறு அவர் தனது கேள்வியில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இக்கேள்வியின் துணைக்கேள்வியாக துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட மாணவிகள், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலை, தனிப்பட்ட முகவரி மற்றும் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய ஆசிரியரின் விபரங்களையும் அவர் கோரியிருந்தார்.

இக்கேள்வி நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி பிரதான அமைப்பாளர் அனுர குமார திசாநாயக்கவின் கோபத்தை கடுமையாக கிளறி விட்டிருந்தது. அவர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கடும் வார்த்தைகளால் விமர்சனமொன்றை முன்வைத்தார்.

அனுரவின் விமர்சனத்தில் இருந்த உண்மை, புத்திகவின் கேள்வியில் இருந்த முட்டாள்தனம் இரண்டையும் புரிந்து கொண்ட ஆளுங்கட்சி (ஐ.தே.க) நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்னவும் இது குறித்து கண்டனம் தெரிவித்தார்.

இதன்போது புத்திகவின் கேள்வியின் தீவிரம் குறித்து உணர்ந்து கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, உடனடியாக குறித்த கேள்வியை வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு புத்திகவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அது தொடர்பான ஹன்சாட் பதிவையும் நீக்க உத்தரவிட்டதுடன், இவ்வாறான கேள்விகளை முன்வைக்க வேண்டாம் என்றும் கண்டித்துள்ளார்.

No comments

Powered by Blogger.