"எமது எல்லையின் உரிமையை பாதுகாத்த நாங்கள், விவகாரத்தை தீவிரமாக்க விரும்பவில்லை" - எர்டோகன்
இஸ்தான்புல்,
சிரியா எல்லையில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தை ரஷியாவுடன் தீவிரப்படுத்த துருக்கி விரும்பவில்லை என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்து உள்ளார்.
துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ரஷியாவின் போர் விமானம் ஒன்றை சிரியா எல்லையில் நேற்று சுட்டு வீழ்த்தியது. துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷியாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இச்சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் ரஷியா விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கிக்கு ரஷியா கண்டனம் தெரிவித்து உள்ளது. துருக்கியின் வான்பகுதிக்குள் ரஷியாவின் போர் விமானம் செல்லவில்லை என்று ரஷியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தை ரஷியாவுடன் தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை என்று துருக்கி தெரிவித்து உள்ளது.
இஸ்தான்புல் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசிய எர்டோகன், “இவ்விவகாரத்தை தீவிரப்படுத்த எங்களுக்கு எந்தஒரு எண்ணமும் எங்களுக்கு கிடையாது. நாங்கள் எங்களது பாதுகாப்பு மற்றும் எங்களுடைய எல்லையின் உரிமை பாதுகாத்து உள்ளோம்,” துருக்கி பதட்டம் மற்றும் நெருக்கடிக்கு ஆதரவாக இருக்காது, இப்போது போன்று எப்போதும் அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவாக இருக்கும். எங்களுடைய எல்லை மற்றும் இறையாண்மை தொடர்ந்து அத்துமீறப்படும் போது நாங்கள் அமைதியாக இருப்போம் என்று யாரும் எதிர்பார்க்கா கூடாது. என்று கூறிஉள்ளார்.
சிரியா எல்லையில் ரஷிய போர் விமானம் அத்துமீறியதால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று துருக்கி திட்டவட்டமாக கூறிஉள்ளது.

சபாஷ்!
ReplyDeleteமிகத்தெளிவான, தைரியமான, நேர்மையான முஸ்லிம் அரசியல் தலைவர்! இவரின்கீழ் ஏனைய முஸ்லிம் நாடுகள் ஒன்றுப்படுமாக இருந்தால்.....!
(அல்லாஹ் நாடும் வரை, இல்லைதான்!)