Header Ads



இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் வேண்டாம், அதனை எதிர்க்கிறோம் - பேராசிரியர் பீரிஸ்

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் நிறுவப்படுவதனை எதிர்ப்பதாக கூட்டு எதிர்க்கட்சி, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சயிட் சாகீல் ஹுசெய்னிடம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளனர்.

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவதனை நம் எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு குறித்து நாம் வருத்தமடைகின்றோம். எமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாலஸ்தீனம் சுயாதீனமான நாடாக இயங்குவதனை விரும்பி செயற்பட்டோம்.

பலஸ்தீன மக்களின் கனவுகளை மெய்படச் செய்ய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார்.

இதன் காரணமாக பலஸ்தீன தலைநகரின் நகரமொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயர் சூட்டப்பட்டது.

முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வரும் பெரும்பாலான அரபிய நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கியிருந்ததாக முன்னாள் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நீங்களும் மகிந்தவும் முன்னர் இப்படி கவலைப்படவில்லையே? பலஸ்தீனை காக்க முன் இலங்கை முஸ்லிம்களை காக்க வில்லையே? இப்போது எவ்வளவு தான் கொக்கரித்தாலும் என்ன பயன்? உங்கள் அனைவருக்கும் உதாரணம்! அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போலுள்ளது. BBS ஐ நம்பி முஸ்லிம்களை கைவிட்டீர்கள்.

    ReplyDelete
  2. Mr.GL had started the relationship with isreil under he was foreign minster in the mahinda government

    ReplyDelete

Powered by Blogger.