தெல்தோட்டை முஸ்லிம்களுக்கு அநீதி..!
-Rishad Baseer-
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் புதிய வட்டாரத் தேர்தல் முறையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபபட்டு வரும் நிலையில் அதற்கான வட்டார எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு வட்டாரங்கள் உருவாக்கபபட்டுள்ளது. இவ்வட்டாரத்திலிருந்தே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் படி தெல்தோட்டை பிரதேச வட்டாரப்பிரிப்பில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
பாதஹேவஹெட்ட பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 108 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 23 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை அங்கத்தவர் தொகுதி 2 உள்ளது. இதன்படி 25உறுப்பினர்கள் இவவட்டார முறையில் பாதஹேவஹெட பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படுவர். இதில் 9 உறுப்பினர்கள் தல்தோட்டை பிரதேச செயலகப்பிரிவில் இருந்து தெரிவு செய்யப்படுவர்.
அவ் 9 வட்டாரங்களில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே ஒரு வட்டாரமே உள்ளது. முன்னொரு காலத்தில் 6 மஸ்லிம் பிரதிநிதிகள் இருந்த பாதஹேவஹெட பிரதேச சபையில் கடைசியாக 3 முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். புதிய வட்டாரத் தேர்தலில் ஒரே ஒரு முஸ்லிம் பிரதிநிதியே பிரதேச சபைக்கு செல்ல முடியுமான நிலைஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் திட்டமிடப்பட்டு கூறுபோடப்பட்டு இவ்வட்டாரப்பிரிப்பு இடம்பெற்றுள்ளது.
1. பள்ளேகம, வடகேபொத, மெதகெகில, கரகஸ்கட தெற்கு (முஸ்லிம் கொலனி) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கி ஓர் வடடாரம் உறுவாக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரம் மட்டுமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வட்டாரமாகும். முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்படும் வாய்புள்ள ஓரே வட்டாரம் இதுவாகும்
2. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட வனஹபுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனியாக பிரிக்கப்பட்டு மாஉஸ்ஸாவ, போபிடிய, பவ்லான கிராம உத்தியோகத்தர் பிரிவுடன் இணைத்து ஓர் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரத்தில் பெரும்பான்மையாக சிங்களவரும் இரண்டாவது தமிழரும் மூன்றாவது முஸ்லிம்களும் உள்ளனர். மேலும் இதன்படி வனஹபுவ முஸ்லிம்கள தமது வாக்கை செலுத்த போபிடியவுக்கு செல்ல வேண்டிய நிலையேற்படும்.
3. ரலிமங்கொட, கோனங்கொட (பத்தாம் பள்ளி), கரகஸ்கட வடக்கு (தெல்தோட்டை நகரம்), ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கபடாகம வடக்கு, தெற்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இது இரட்டை அங்கத்தவர் தொகுதியாயினும் இவ் வட்டாரத்தில் முஸ்லிம்கள் சனத்தொகை மூன்றாம் இடத்திலேயே உள்ளது. முஸ்லிம் கொலனி, தெல்தோட்டை நகரம் இரண்டும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கொண்ட சமூக பொருளாதார ரீதியில் இரண்டரக்கலந்த பிரதேசங்களாகும். எனினும் இவை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இம்மூன்று பிரிவுகளையும் உரிய முறைறயில் பிரித்தால் மூன்று முஸ்லிம் பிதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தெல்தோட்டை பிரதேச செயலகப்பிரிவில் 2011 ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி சிங்களவர் 39% தமிழர் 33% முஸ்லிம்கள் 27% மற்றவர் 1% உள்ளனர். இதன்படி சிங்களவர் 4 தமிழர் 3 முஸ்லிம் 2 எனும் விகிதத்தில் பிரதேசசபை பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
இது தொடர்பில் தெல்தோட்டை பிரதேச முஸ்லிம்கள் தமது கவனத்தை செலுத்த வேண்டும்.
இதுபோல் நாடுபூரகவும் முஸ்லிம்கள் இப்புதிய வட்டாரப்பிரிப்பு தொடர்பில் அவதானத்தை செலுத்தி தமது உரிமைக்காய் குரல்கொடுக்க வேண்டும்

Post a Comment