அநுரகுமார என்னுடைய உதவியை நாடினார் - கோத்தா, மறுக்கிறது ஜே.வி.பி.
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரத்னத்தை 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி கைது செய்வதற்கு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவசியம் இருந்ததாகவும், அதற்காக தன்னிடம் தகவல் வழங்கியதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணிக்கு, முன்னிலை சோசலிசக் கட்சியினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அநுரகுமார , கோத்தபாய ராஜபக்ச ஊடாக அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு ஆதரவு பெற்றுகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2
2010ம் ஆண்டு குமார் குணரட்னம் கைது செய்யப்படுவதற்கு ஜேவிபி காரணமாக இருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
குணரட்னத்தை 2012ல் கைதுசெய்ய ஜேவிபியின் தற்போதைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவே தகவல் தந்ததாக முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதனை செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது பிமல் ரட்நாயக்க, இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் மூலம் ஜேவிபிக்கு களங்கம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் பிமல் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment