Header Ads



ஜம்மியத்துல் உலமாவின் தோல்வி, இலங்கை முஸ்லிம்களுக்கு சாபக்கேடாக அமையும்..!

ஜம்இயதுல் உலமா சபை கடந்த ஒன்பது தசாப்தங்களாக நாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றி வருகிற்து...தாடி பழுத்த பல முதிர்ந்த அனுபவசாளிகளை கொண்ட இச்சபை உலகலாவிய ரீதியில் இலங்கை முஸ்லிம்களின் பிரதிநிதியாக திகழ்கிறது.

எனவே அச்சபையின் தோல்வி, பின்னடைவு, தடுமாற்றம், தூரநோக்கின்மை, பிடிவாதம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகள் நாட்டு முஸ்லிம்களுக்கே ஒரு சாபக்கேடாக அமையும் என்பது நிதர்சனம். எனவே ஜம்இய்யா நாட்டு முஸ்லிம்களுக்கு வரும் இன்னோறன்ன சவால்களை எதிர்நோக்கும் விதமே தனியானது, தூர நோக்குடையது, உறுதியானது, பிடிவாதமற்றது, அகிம்சையானது, விட்டுக்கொடுப்புடையது, சண்டைசச்சறவற்றது, வீண்விவாதமற்றது.

இவை வெறும் தமிழ் வசனங்கள் அல்ல மாறாக கடந்த கால ஜம்இய்யாவின் நடவடிக்கைகள் சொல்லிச்சென்ற உண்மைகள்,கடந்த 9 தசாப்தகாலம் விட்டுச்சென்ற முன்மாதிரிகள். முன்னுதாரனங்கள் பலநூறு அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லோர் மனதிலும் இன்னும் நீங்கா வடுவாக பதிந்துள்ள அண்மைக்கால தர்காநகர் கலவரம் முழுநாடும் கொதித்தெழுந்தது,ஆயுதம் ஏந்தத்துடித்தது.. ஏன்?அநுபவ முதிர்ச்சி இல்லாத,தூர நோக்கற்ற,பிறரை தூற்றி ஏசிப்பேசி, வம்பு செய்து,தஃவா புரட்சி என்ற பெயரில் அப்துர்ராசிக்,ரஸ்மின் தலைமையில் ஜம்இய்யாவின் அமைதியான அகிம்சைவழி முன்னெடுப்புகளை விமர்சித்து ஆத்திரத்தோடு கொழும்பில் வீதியிரங்கி ஆர்ப்பாட்டம் செய்து முஸ்லிம்களை உசுப்பேற்றி ஆயுதக்கலவரமொன்றை ஏற்படுத்த துடித்த அந்த SLTJ புத்திமத்திமமான ஆத்திரக்காரர்களை இந்நாட்டு முஸ்லிம்கள் எளிதில் மறக்கமாட்டார்கள்.

ஆனால் இவர்களின் சிறுபிள்ளைத்தனத்தை கண்ட மக்கள் மனஉறுதியோடு ஜம்இய்யாவின் பின்னால் அணிவகுத்தனர்,அதன் தன்னிகரற்ற தலைவர் முப்தி ரிஸ்வி அவர்கள்(அல்லாஹ் அவரின் ஆயுளை நீளமாக்குவானாக)தர்கா நகர் இந்த அசம்பாவிதமானது ஹுதைபிய்யா வின் பின்னனி உடையது எனவே மக்களே பொறுமைகாருங்கள்,குனூத் ஓதுங்கள்,துஆ செய்யுங்கள்,நோன்பு வையுங்கள்,இஸ்திஃபாரை கடை பிடியுங்கள்,முடிந்தளவு வீட்டுக்குள்ளே இருங்கள் என்றெல்லாம் ஒரு தீரமிக்க அகிம்சை போர்தளபதியாய் மக்களை வழி நடத்தினார்....அந்த நேரத்தில் அவர் மீது சில பகுத்தறிவிழிகள் ப்..ப்ப்...பாாா எப்படியெல்லாம் விமர்சனம் செய்தார்கள்...

இறுதியில் வெறுமனே மூன்று உயிர்பழியுடன் மெய்சிலிர்க்கும் ஒரு வரலாறு காணாத வெற்றியை அல்லாஹ் தந்தான்...அதன் பின்னர் கூட ஜம்இய்யா மார்தட்டி மேடைபோட்டு வீரதீரம் பேசவில்லை மாறாக இஸ்திஃபாரே செய்தனர் அவர்களி பணிவை,நல்மனதை என்னவென்று சொல்வது!!!அதே நேரம் வெற்றி கிட்டிய பின்னர் ஜம்இய்யாவின் மதிநுட்பத்தை,தூரநோக்கை அவர்களை விமர்சித்தவர்கள் கூட மெச்சிப்பாராட்டினர்...இதே நேரம் SLTJ சொன்னது கேட்டு மக்கள் கலவரத்தில் இறங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்???சிந்தித்துப்பாருங்கள்...அதே போன்றுதான் இந்த PJ விவகாரத்திலும் ஜம்இய்யா"PJ வருகை ஆரோக்கியமற்றது"என்று ஒரு சாதாரண notice கொடுத்ததில் உள்ள ரகசியங்கள் மிக மிக தூர நோக்குடையவை...சற்றே சிந்திப்பவர்கள் இலகுவில் புரிந்து கொள்வர் ; Vasakan

2 comments:

  1. There will be no defeat for ACJU even in the dream. Defeat is always for silly groups which are operated by jobless fellows.

    ReplyDelete
  2. There is no defeat for ACJU> They are after cheap poublicity like others, Done make stupid comments for an organisatio which is tirelessly working towards Muslim Ummath.

    ReplyDelete

Powered by Blogger.