அதிருப்தியினாலே சோபித தேரர் மரணம், அரச செலவில் இறுதிக் கிரியை நடத்தி நல்லாட்சியை அமைக்க முடியாது
மாதுலுவாவே சோபித தேரர் அதிருப்தி காரணமாகவே உயிரிழந்தார் புரவெசி பலய அமைப்பின் அழைப்பாளர் தர்மசிறி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
சோபித தேரரின் இறுதிக் கிரியைகளை பூரண அரச அனுசரணையில் நடாத்துவதில் பயனில்லை.
அரச செலவில் சோபித தேரரின் இறுதிக் கிரியைகளை நடத்துவதனால் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது. சோபித தேரர் எதிர்பார்த்த நல்லாட்சியை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை அரசாங்கம் நிலைநாட்டத் தவறியுள்ளது. எனினும் சில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் ஆணைக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லாட்சியை ஏற்படுத்த அரசாங்கம் தவறினால் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நேர்ந்த கதியே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் என தர்மசிறி பண்டாரநாயக்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment