Header Ads



அமெரிக்கா என்றால் இப்படித்தான்...!

"உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்கள் 5 சதவீதத்தினரே பங்கு வகித்தாலும், உலகிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதத்தினர் அமெரிக்கர்களாக உள்ளனர்' என அந்த நாட்டு அதிபர் ஒபாமா வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

 அமெரிக்க சட்டத் துறை சீர்திருத்தம் குறித்து நியூ ஜெர்ஸியில் அவர் திங்கள்கிழமை பேசியதாவது:

 அமெரிக்காவில் 22 லட்சம் பேர் சிறைக் கைதிகளாக உள்ளனர்.  உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிக அளவாகும்.  உலக மக்களில் வெறும் 5 சதவீதத்தினரே அமெரிக்காவில் வசிக்கின்றனர். எனினும், உலகெங்கும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் அமெரிக்கர்களாக உள்ளனர்.

 அதிலும், மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு நேர்மாறாக அதிக எண்ணிக்கையில் கருப்பர் மற்றும் "ஹிஸ்பானிக்' பிரிவினர் சிறைக் கைதிகளாக உள்ளனர் (மெக்ஸிகோ மக்கள் உள்ளிட்ட தென் அமெரிக்கர்கள் "ஹிஸ்பானிக்' எனக் குறிப்பிடப்படுகின்றனர்).

 7 கோடி அமெரிக்கர்கள் மீது ஏதாவது ஒரு குற்றப் புகார் உள்ளது. அதாவது, நான்கில் ஒரு அமெரிக்கர் மீது குற்றப் புகார் உள்ளது.

 அரசுப் பணிகள்: சிறையிலிருந்து வெளியில் வரும் அமெரிக்கர்களின் புனர்வாழ்வுக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

 அரசுப் பணிகளுக்காக விண்ணப்பவர்களின் தகுதிகளை மட்டும் பார்க்காமல், அவர்களது குற்றப் பின்னணியை ஆராயும் வழக்கம் மாற வேண்டும். இதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என நம்புகிறேன் என்றார் அவர்.

4 comments:

  1. இறால் தன் தலையினுல் அழுக்கை வைத்துக்கொன்டு தான்சுத்தமென என்னிக்கொன்டுதிரியுமாம் அதுபோல்தான் இந்தவேடிக்கையும் தன்நாட்டு அழுக்கை கழுவாது அடுத்தநாட்டு அழுக்கை கழுவநினைப்பதை இந்த உன்மையில் இருந்தாவது அந்த நாட்டுமக்கள் புரிந்துகொல்லட்டும்

    ReplyDelete
  2. நான் எழுத இருந்ததை al visath எழுதிவிட்டார். இன்னும் எத்தனை ஓட்டைகள் வெ ளிவராமல் இருக்கிறதோ எல்லாம் வழி வரும்.

    ReplyDelete
  3. This is also due to man made laws though they appear to be good but there are more negative effects in them. It is time for Americans to study Islam.

    ReplyDelete
  4. நம் நாட்டு அரசியல் வாதிகளில் யாராவது இப்படி சிந்தித்து இருப்பார்களா?
    தன் குறையை ஒப்புக் கொள்ளும் போது தான் ஒருவன் திருந்த ஆரம்பிக்கிறான்

    ReplyDelete

Powered by Blogger.