Header Ads



பெண் மரமாக மாறும், பிரிட்டன் ஆண் மரம்

பிரிட்டனில், 5,000 ஆண்டுகளாக வளர்ந்து வரும், ஆண் மரம் என வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரு மரத்தின் ஒரு பகுதி, பெண் மரத்தின் தன்மைகளுடன் மாறி  வருவதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டனின் ஒரு பகுதியாக, ஸ்காட்லாந்து திகழ்கிறது. அங்குள்ள, 'போர்ட்டிங்கால் யீவ்' என்ற மரம், 5,000 ஆண்டுகள் பழமையானது என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 

ஆண் மரமாக வகைப்படுத்தப்பட்டிருந்த இதன் ஒரு கிளையில், பெண் மரத்துக்குரிய, சிவப்பு நிறத்திலான, பெர்ரி வகை காய்கள், காய்த்து தொங்குகின்றன. இதைக் கண்டு அதிசயித்த ஆராய்ச்சியாளர்கள், இம்மரத்தின் ஒரு பகுதி, பெண்ணாக மாறி வருவதாக அறிவித்துள்ளனர். 

''போர்ட்டிங்கால் யீவ் மரம், பாலின மாற்றம் அடைந்து வருவது, அதிசயமாக தோன்றினாலும், ஈவ் மரங்கள் ஆணாகவும், பெண்ணாகவும் மாற்றம் பெறுவது, புதிய விஷயமல்ல,'' என, தாவரவியல் நிபுணர் கோல்மேன் கூறியுள்ளார்.'ஆண் மரங்களில், பூக்கள், காய்கள் காய்க்காது; பெண் மரங்களில் தான் அத்தகைய தன்மை இருக்கும்' என, தாவரவியலாளர்கள் கூறுகின்றனர்.





No comments

Powered by Blogger.