தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், ஒரு தொழிற்சாலைக்கான வசதிகள் கூட இல்லை - அநுரகுமார
எவ்வித பௌதீக அடிப்படை வசதிகளும் இன்றி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திலுள்ள சுமார் 300 மாணவர்கள் செய்வதறியாது நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (6) உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடமொன்றின் அவசியம் காணப்பட்ட போதிலும், அதன் தேவை தொடர்பில் முழுமையாக ஆராயாது, 2012ஆம் ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேற்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்ததாக அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இந்த தென்கிழக்கு பல்கலைக்கழகம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொறியியல் பீடமொன்றுக்கு தேவையான எவ்வித அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மிகவும் பின்தங்கிய பிரதேசமான ஒலுவில் பகுதியில் இந்த பீடம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், தகுதியான அனுபவமுள்ள நிர்வாகமொன்றை ஏற்படுத்துவதற்கான கவனத்தையும் அதிகாரிகள் செலுத்தவில்லை என அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டினார்.
இது பல்கலைக்கழகம் என்பதனை விட, ஒரு தொழிற்சாலைக்கான வசதிகள் கூட அங்கு காணப்படாத நிலையே உள்ளது என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
பொறியியல் பீடங்களை கொண்ட ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில், தென்கிழக்கு பல்கலைக்கழகம் மிகவும் பின்தங்கி நிலையிலேயே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Perfectly correct, Hon. Sir, Here the engineering faculty students are facing a number of problems with regard to their studies and practicals. There was a rumour that the engineering students would be sent to an Institute located in Ampara for their practicals but nothing has taken place yet.
ReplyDelete