மைத்திரியின் நேரடிக் கண்காணிப்பில் ஆயுதக்கப்பல்
ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் அவன்ட்கார்ட் ஆயுதக்கப்பல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய விசேட அமைச்சரவை தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதார மற்றும் போசனை நலனோம்புகை அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அவன்ட் கார்ட் உள்ளிட்ட அனைத்து பாரிய மோசடிகள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளவுள்ளதாக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது அறிவித்துள்ளார்.
அதற்கேற்ற வகையில் இந்த விடயத்தில் தொடர்புடைய நீதித்துறையினர், காவற்துறையினர் மற்றும் குறிப்பிட்ட சில அமைச்சர்களுடன் இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் பின்னர் மேற்கண்ட விசாரணைகள் தொடர்பில் பொருத்தமான முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

Veyy good
ReplyDeleteஇவருடைய நேரடி கண்காணிப்பில நல்ல விசாரணை நடக்கும் வஸீம் தாஜுதீனின் உடற்பாகம் காணாற்போனமாதிரி
ReplyDelete