Header Ads



நாய்க் கூண்டிலிருந்து மீட்கப்பட்ட வயோதிபர் இன்று மரணம், அரச செலவில் நல்லடக்கம்

கண்டி பிரதேசத்தில் நாய்க்கூண்டொன்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து மீட்கப்பட்ட வயோதிபர் இன்று (9) மரணத்தைத் தழுவியுள்ளார்.

கண்டி கெங்கல்லை பிரதேசத்தில் தனது புதல்வியின் வீட்டில் நாய்க்கூண்டினுள் அடைத்து வைக்கப்பட்ட குறித்த முதியவர் மீட்கப்பட்டு, அம்பிட்டிய பிரதேசத்தில் இருந்த வயோதிபர் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மரணத்தைத் தழுவியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இறக்கும்போது அவருக்கு 73 வயது என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த வயோதிபரின் நல்லடக்க விடயங்களை அரச செலவில் மேற்கொள்ளுமாறு கண்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தனது தகப்பனாரை நாய்க்கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வயோதிபரின் புதல்வி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.