Header Ads



மண்ணெண்னை + சமையல் எரிவாயு விலை குறைகிறது - மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்

மண்ணெண்னை விலை 10 ரூபாயாவும் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினருக்கு குறைந்த பட்சம் மாதாந்தம் 2,500 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வரவு-செலவுத்திட்ட உரையின்போது கூறினார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.