Header Ads



நாமல் ராஜபக்ஸ குறித்து விசாரிக்க, டுபாய் சென்ற இலங்கைக்குழு நாடு திரும்பியது

முன்னாள் முக்கிய பிரமுகரின் மகனின் சொத்துக்களை முடக்குவது தொடர்பான நடவடிக்கைகளிற்காக அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவினர் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை துபாயில் மேற்கொண்ட பின்னர் இலங்கை திரும்பியுள்ளனர்.

நிதிகுற்றவியல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ள விசேட பொலிஸ் பிரிவின் தலைமையதிகாரி ரவிவைத்தியலங்கார,இலஞ்ச ஊழல் விசாரi ண ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்சி டயஸ் விக்கிரசிங்க,உட்பட நான்கு அதிகாரிகள் அங்கம் வகிக்கும் குழுவே துபாய் சென்று வந்துள்ளது.

குறிப்பிட்ட வங்கிக்கணக்கை முடக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோள்களை துபாய் நிராகரித்துள்ளமை தெரிந்ததே,குறிப்பிட்ட முன்னாள் மிக முக்கிய பிரமுகரின் மகன் இவ்வளவு சொத்துக்களை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் இலங்கையில் விசாரிக்கப்படவுமில்லை, தண்டிக்கப்படவுமில்லை என்ற அடிப்படையிலேயே அந்த நாடு இலங்கையின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது.மேலும் இது சட்டவிரோத வழிவகைகள் மூலமாக பெறப்பட்ட கறுப்பு பணம் என்பதும் நிரூபிக்கப்படவில்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் ஓரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை காணப்பட்டதாகவும்,  விசாரணைகள் இடம்பெறுவதாக தெரியவந்தவுடன், பணம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டவுடன் 500 மில்லியனே உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை குழுவினர் துபாயின் உள்துறை அமைச்சக அதிகாரிகள்,சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுடன் தீவிர பேச்சுக்களை மேற் கொண்டுள்ளனர், எனினும் முன்னர் இலங்கை;காக அமர்த்தப்பட்ட  சட்டநிறுவனம் இம்முறை இணைந்துகொள்ளவில்லை.கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட தவறான அணுகுமுறைக்காக மன்னிப்பு கோரிய இலங்கை அதிகாரிகள் இம்முறை வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற சூழ்நிலையை தெளிவுபடுத்தி உள்ளனர்,நட்புணர்வுடன் கூடிய பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிவித்த அக்குழுவினர், பேச்சுவார்த்தைகள் வெற்றி அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட குழுவினர் துபாய்க்கு செல்வதற்கு முன்னதாக,  வங்கிகணக்கு குறித்து தகவல் கிடைத்த காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற அனைத்து விடயங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர்,இதன் போது குறிப்பிட்ட பணம் மஸ்ரெக்வங்கியிலேயே காணப்படுவதும் தெரியவந்துள்ளது.குறிப்பிட்ட வங்கிக்கு இலங்கையில் கிளையுள்ளதும்,முன்னைய அரசாங்கம் ஸ்ரீலங்கா எயர்லைன்சிற்கு புதிய விமானத்தை கொள்வனவு செய்வதற்கு இந்த வங்கி உதவியதும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. என்ன புதிதாக கூறப்போகின்றார்கள் எல்லாம் புஸ்வானம் தான்

    ReplyDelete
  2. Inefficient team has returned to Srilanka with empty hand.

    ReplyDelete

Powered by Blogger.