Header Ads



ஐஸிஸ் பயங்கரவாதிகள் குறித்து, முஹம்மது நபி முன்னெச்சரிக்கை செய்திருந்தார்களா..?

-Kalaiyarasan Tha-

-Did Prophet Muhammad Warn Us of ISIS?-

ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம்.
விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்றது. பைபிளுக்கும், குரானுக்கும் இடையிலான ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. 

இஸ்லாத்தின் இறைதூதரான முகமது நபி வார்த்தைகளை குறிப்பிடும் ஹதீஸ் நூலின் ஒரு பகுதி உள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நாம் நம்புவதும், நம்பாததும் வேறு விடயம். ஆனால், அதிலிருக்கும் சில வாசகங்கள், நமது காலத்தில் இயங்கும் ISIS என்ற தீய சக்தியை இனங் காட்டுவதாக எழுதப்பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.

//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: 

இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள். அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். //

(The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij.)

அதே நூலில் Kitaab Al Fitan இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவிக்கின்றது. ISIS தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை "இஸ்லாமிய தேசம்" என்று பிரகடனம் செய்துள்ளனர். அதை அரபியில் "டாவ்லா" (Dawla) என்கிறார்கள்.

Kitaab Al Fitan நூல், இரும்பு மனம் படைத்த, "டாவ்லாவின் (தேசத்தின்) கையாட்கள்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. அவர்கள் நீண்ட முடி வளர்த்திருப்பார்கள். கருப்புக் கொடி ஏந்தி இருப்பார்கள் என்று கூறும் வாசகங்கள், இன்றைய ISIS அமைப்பினருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அது மட்டுமல்லாது ஒப்பந்தங்களை மீறுவார்கள் என்றும், ஊரின் பெயரை வைத்திருப்பார்கள் என்றும் கூறுகின்றது. ISIS தலைவர் அபுபக்கர் அல் "பாக்தாதி", பாக்தாத் என்ற ஊர்ப் பெயரை வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

ISIS, ஓர் இஸ்லாமிய விரோத சக்தி என்பதை, ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், இன்னமும் ISIS "இஸ்லாத்தின் பெயரால்" போராடுவதாக, அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமே நம்புகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான தீவிர வலதுசாரிகளும், ISIS இன் இருப்பை நியாயப் படுத்துவதற்காக, அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு:

The Book of Zakat
http://sunnah.com/muslim/12/206
http://sunnah.com/bukhari/61/118
Calling ISIS Un-Islamic Is A Fact, Not An Excuse
http://www.huffingtonpost.com/…/calling-isis-unislamic-is_b…

6 comments:

  1. Narrated `Ali:

    I relate the traditions of Allah's Messenger (ﷺ) to you for I would rather fall from the sky than attribute something to him falsely. But when I tell you a thing which is between you and me, then no doubt, war is guile. I heard Allah's Messenger (ﷺ) saying, "In the last days of this world there will appear some young foolish people who will use (in their claim) the best speech of all people (i.e. the Qur'an) and they will abandon Islam as an arrow going through the game. Their belief will not go beyond their throats (i.e. they will have practically no belief), so wherever you meet them, kill them, for he who kills them shall get a reward on the Day of Resurrection."
    حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلأَنْ أَخِرَّ مِنَ السَّمَاءِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ، وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ، فَإِنَّ الْحَرْبَ خَدْعَةٌ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الأَسْنَانِ، سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏‏.‏
    Reference : Sahih al-Bukhari 3611
    In-book reference : Book 61, Hadith 118
    USC-MSA web (English) reference : Vol. 4, Book 56, Hadith 808

    ReplyDelete
  2. Mahendran gowrishankar..they will kill innocent people so thats what isis doing now..for them you want to show mercy.talking abput your gods...devils..sexual gods..penny..linga worshipping. .not like that in islam.infact worlds dangerous terrorist are ltte.

    ReplyDelete
  3. Hey crazy Gowry..." Avargalai kandaal kondruvidungal". Do you know why? Illavitaal avargal ungalai kolvaargal...this is what's happening in Iraq / Syria.

    ReplyDelete
  4. Nobody is allowed to insult other religious gods as they may insult our lord almighty without knowledge this what Al Quran teaches us...

    ReplyDelete
  5. அன்பின் இஸ்லாமிய வாசகர்களே... முதலில் இந்த ஆக்கத்தை எழுதியவரின் சொல்லாடல்களை கவனியுங்கள்... இது ஒரு முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்டதாக ஊகிக்கமுடியாதுள்ளது.. காரணம்:

    1. இதில் முஸ்லிம்கள் விழிப்பதுபோல் "அல்லாஹ்" என்றில்லாமல் "அல்லா" என்றும் "முஹம்மது" என்றில்லாமல் "முகமது" என்றும் விழிக்கப்பட்டுள்ளது.

    2. இதில் முஸ்லிம்கள் விழிப்பதுபோல் அல்லாஹ், அல்லது இறைவன் என்றோ (குறைந்தது) ஆண்டவன் என்றோ இல்லாமல்
    கிருஸ்தவர்கள் அழைப்பதுபோல் "ஆண்டவர்" என்று விழிக்கப்பட்டுள்ளது.

    ஆக, அல்குரான், ஹதீஸ் மீதான இப்படியான முஸ்லிம் அல்லதா ஏனையோரின் ஆக்கங்களை வைத்து முஸ்லிம்களாகிய நாங்கள்
    முடிவு எடுப்பதோ, விமர்சிப்பதோ தவறு. ஏனெனில் அதில் உண்மைகளைவிட பொய்களும், இட்டுக்கதைகளுமே மிதமிஞ்சியிருக்கும்! (உதாரணம்... பொதுபலசெனவின் விளக்கங்களும், விமர்சனங்களும்)

    எனவே, இந்த ஜப்னா முஸ்லீம்ஸ் இணையத்தளமும் மிகக்கவனமாக இவ்வாறான ஆக்கங்களை கையாளவேண்டும்!
    .


    ReplyDelete
  6. It means not kill others. don't change the word. They(ISIS)are killers (killing innocents). That is y the punishment to them by killing.

    ReplyDelete

Powered by Blogger.