குணடர்களாக மாறிய பொலிஸார், பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும்
சட்டம் ஒழுங்கு தொடர்பிலான அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலான பொறுப்பினை ஏற்றுக்கொண்டு இவ்வாறு பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் குண்டர்களைப் போன்று செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர்கள் அமைதியான முறையில் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

Post a Comment