வடகொரியா ஆட்சியாளர் குறித்த, அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியது
வட கொரியா நாட்டின் குடிமக்களில் சுமார் 50,000 அடிமை தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் ஈட்டும் வருமானத்தை பறித்து பில்லியன் டொலர் கணக்கில் அந்நாட்டு சர்வாதிகாரியான கிம்-யோங் சேமித்து வருவதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் சர்வாதிகார நாடாக திகழும் வட கொரியா மீது ஐ.நா சபை பொருளாதார தடை விதித்துள்ளது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும். இந்த தடையால், வடகொரியா அரசிற்கு உலகநாடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வட கொரியாவிலிருந்து முக்கிய அரசு அதிகாரிகள் அந்நாட்டிலிருந்து தப்பி அருகில் உள்ள தென் கொரியா நாட்டிற்கு தஞ்சம் அடைந்து வருவதால், வட கொரியாவின் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது. இதனை சரி செய்யும், ஐ.நா சபையின் பொருளாதார தடைக்கு தக்க பதிலடி அளிக்கவும், வட கொரியா சர்வாதிகாரியான கிம்-யோங் ஒரு கொடூரமான திட்டத்தை செயல்படுத்தி வருவது தற்போது ஐ.நா சபை மூலம் அம்பலமாகியுள்ளது.
கடந்த மே மாதம் குவைத் நாட்டில் ஒரு வட கொரியா இளைஞர் மூலம் இந்த கொடூரமான திட்டம் முதன் முதலாக உலகிற்கு தெரியவந்துள்ளது. அதாவது, வெளிநாடுகளின் கரன்சி மூலம் வருமானத்தை பெரும் நோக்கில், வட கொரியா குடிமக்களை வெளிநாடுகளுக்கு அடிமை தொழிலாளிகளாக அந்நாட்டு அரசு அனுப்பி வைப்பது தெரியவந்தது. குவைத்தில் பணிபுரிந்து வந்த அந்த பெயர் வெளியிடப்படாத நபர் 5 மாதங்களாக பணி செய்தும், அவருக்கு ஊதியம் வழங்கப்பட வில்லை.
அவருடைய அத்தனை ஊதியமும் நேரடியாக வட கொரியா அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்தது. இதனால், விரக்தி அடைந்த அந்த வாலிபர் குவைத்திலிருந்து தப்பி தென் கொரியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு Marzuki Darusman என்ற அதிகாரிக்கு ஐ.நா சபை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் வட கொரியாவில் கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் அவர் வெளியிட்டார்.
அதில், வட கொரியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சுமார் 50,000 அடிமை தொழிலாளிகளை அந்நாட்டு அரசு அனுப்பி வைத்து, அவர்கள் ஈட்டும் வருமானத்தை பறித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தகவல்களில் 1,00,000 தொழிலாளர்களை வட கொரியா அரசு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வட கொரியாவின் ஆதரவை பெற்ற ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தான் அதிக எண்ணிக்கையில் தொழிலாளிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இவ்விரு நாடுகள் மட்டுமின்றி, அல்ஜீரியா, அங்கோலா, கம்போடியா, கினியா, எத்தியோபியா, குவைத், லிபியா, மலேசியா, மங்கோலியா, மியான்மர், நைஜீரியா, ஓமன், போலந்து, கத்தார், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு 50,000 அடிமை தொழிலாளிகள் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அடிமை தொழிலாளிகள் எந்த பணி செய்ய வேண்டும், எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற உடன்படிக்கையை வட கொரியா அரசு குறிப்பிட்டு நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒரு தொழிலாளி நாள் ஒன்றிற்கு 20 மணி நேரம் உழைக்க கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடுமையாக உழைக்கும் இந்த தொழிலாளிகளுக்கும் மாதம் 120 டொலர் முதல் 150 டொலர் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஊழியர்களுக்கு உண்மையில் சேரவேண்டிய ஒரு பெரும் தொகையை மாத மாதம் வட கொரியா அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சட்டவிரோதமான ஊழியம் மூலம், அட கொரியா அரசு ஆண்டிற்கு சுமார் 1.2 பில்லியன் டொலர் முதல் 2.3 பில்லியன் டொலர் வரை சம்பாதித்து தனது கஜானாவை நிரப்பி வருகிறது.
மேலும், வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக அனுப்பப்பட்டுள்ள தொழிலாளிகள் தப்பி விடாதவாறு, அவர்கள் அனைவரும் வட கொரியா சர்வாதிகாரியான கிம்-யோங்கின் நேரடி கண்காணிப்பில் இருப்பதாகவும் Marzuki Darusman அறிக்கையில் தெரியவந்துள்ளது.

HE is taking the money of his own country people.. But look at US... It is taking the money of many middle eastern countries,,, by plots and plan if not last by force too..
ReplyDeleteTill these countries do not oppose... they are protected by biasness..at UN. But when they start opposing the US... they get caught for even simple issues at UN
Israel is stealing the land of Palestine.. What UN has done except passing so called un acted warnings. But for US.. Israel has the right to defend for the occupied lands of poor Palestinians, who fight with stones for their rightst