Header Ads



சொகா மல்லி ஜனாதிபதியாகவும், முத்துஹெட்டிகம பிரதமராகவும் மாறக்கூடிய அபாயம் காணப்படுகிறது - சரத் பொன்சேக்கா

நிலக்கீழ் மாளிகை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அம்பலப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கெடை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டே ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகையில், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புச் சபைக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்த பதுங்கு குழி மாளிகையில் பாதுகாப்பு படையதிகாரிகள் கூடி பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவ்வாறான எந்தவொரு கூட்டங்களும் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பெலவத்தை ஹக்குருகொட பாதுகாப்பு தலைமையகம் அமைப்பதற்கு செலவான அளவிற்கு நிலக்கீழ் மாளிகை அமைக்க செலவாகியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாளிகை அமைப்பதற்காக சுமார் 33 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நாடு முன்னோக்கி நகர்ந்தால் இரத்தினபுரி மாவட்ட அரசியல்வாதி சொகா மல்லி ஜனாதிபதியாகவும், காலியைச் சேர்ந்த நிசாந்த முத்துஹெட்டிகம பிரதமராகவும் மாறக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.