வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், காலத்தின் கட்டாயம் - பிரபா கணேசன்
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பிரச்சினை, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை பொறிமுறையில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சருக்கும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது -
விடுதலைப்புலிகள் காலத்தில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை இன சுத்திகரிப்பு என யாழ் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பது பிழையான கருத்தாகும். இதனை அவர் கூறுவதன் மூலமாக தன்னை தானே சிலருக்காக சுத்திகரித்துக்கொள்ள முயற்சிக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
வட மாகாணத்திலிருந்து முஸ்லிகள் வெளியேற்றப்பட்டமையை ஒரு போதும் நியாயப்படுத்தி விட முடியாது. இருப்பினும் அன்றைய யுத்த கால தமிழ் தேசிய போராட்டத்தின் காலத்தின் கட்டாயமாக இவ் நிகழ்வு இடம்பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. வடக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்பு அவர்களது நிலங்களை விடுதலைப் புலிகள் அபகரித்து தமிழர்களுக்கு தாரை வார்க்கவில்லை. அதே போல் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து வெளியேறியதன் காரணமாக யுத்தத்தின் மூலமான நேரடி தாக்குதல்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள கூடியதாக இருந்தது. முஸ்லிம் மக்களின் உயிரிழப்புகள் இதன் மூலம் தவிர்க்கப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் இனத்தை அடக்கி ஆளும் சிங்கள அரசாங்கத்தின் இராணுவதிற்கு எதிரான தமிழ் தேசிய போராட்டத்தின் போது இப்படியான சில எதிர்மறை நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இன்று தன்னை வெகு சுத்தமான மனிதனாக காட்டிக் கொள்வதற்காக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை இன சுத்திகரிப்பு என்று சொல்லும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் விடுதலைப் புலிகள் இன்றும் இருப்பார்களேயாயின் வாய் திறந்து தைரியமாக பேசுவாரா? இதனைப் பார்க்கும் பொழுது இவரை விட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி நேர்மையான மனிதராக தெரிகின்றார்.
இன்று இவ்விடயம் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இவரது கூற்றை கடுமையாக எதிர்க்கின்றார்கள் என்று தெரிந்தும் இவர் இதனை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் சர்வதேசத்திற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தாளத்திற்கும் ஆட முயற்சிக்கின்றார்.
முஸ்லிம் மக்களின் நியாயமான உணர்வுகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். அவர்களது உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது அதற்கு நாங்கள் துணை நிற்க தயாராக இருக்கின்றோம். அதே நேரத்தில் எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் எந்த அளவு எமக்கு உறுதுணையாக நின்றார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
இன்று நல்லாட்சி என்று சொல்லப்படும் இந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு விட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். தமிழர் தாயக நிலங்கள் மீண்டும் கையளிக்கப்பட்டு விட்டது. இடிக்கப்பட்ட இந்து கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டன. தமிழ் மொழி அமுலாக்கம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து இராணுவம் விலக்கப்பட்டு விட்டது. வடமாகாண சபைக்கு பொலிஸ் காணி முதற்கொண்டு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு விட்டது. மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் நடைபெற்று விட்டதாக கனவு காணும் இந்த பாராளுமன்ற உறுப்பினர் நடந்து முடிந்த தமிழ் தேசிய போராட்டத்தினை சுய சிந்தனையுடன் திரும்பி பார்க்க வேண்டும். இன்று இவரது கருத்தின் மூலமாக வடக்கிலிருந்த வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினையினை ஐ.நா விசாரனை பொறிமுறையில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உருவாகியுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான ஐ.நா விசாரனை தடம்புரள வழிவகுத்துள்ளது.

You bloody you dont have any rights to talk about this, Shut-up....
ReplyDeleteyou changed your rubbish behaviour for the Mahinda's money against to your own party & your own brother then how you can care of a community...
Shut-up!!
ஆக மொத்தத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை விட்டு ,,
ReplyDeleteயுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கான நியாயம் காணவா ...?? கோரிக்கை விடுகிறீர்கள் ...,
and
முஸ்லிம்களுக்கும் தீர்வு வேண்டும் என்றால் அவர்கள் திருப்ப போய் யுத்தம் செய்தல் வேண்டும் .., அதன் பிற்பாடு , இழப்புக்களை சந்தித்த பின்னர் வாருங்கள் என்கின்றீர்களா ..??
இனி பிரச்சினை என்றால் இவர்களைப் போல உளறித்திரியும் ()தமிழர் கலுடன் என்பதை மறவாதே மு.அமைச்சரே !!..
பாதிக்கப்பட்டவன் , தன்னை போல் பாதிக்கப்பட்ட இன்னொருத்தனுடைய வழியை சுயமாக உணரும் போதுதான் அந்த மிருகம் - மனிதன் என பெயர் பெறுகிறான் ...!!
நீதி நியாயம் தெரிந்தவன் இனம்பார்த்து மொழிபார்த்து பட்டம்பதவிகள் பரிபோய்விடும் எனபயந்து ஒருபோதும் பதில்சொல்லமாட்டான் சுமந்திரன் நீயாயம் தெரிந்தேதான் பதில்சொன்னர் எங்கலுக்கு உங்கமன்னிப்பும் தேவையில்லை மன்னாங்கட்டியும் தெவையிலலை விரட்டியமக்கலை அவர்கலுக்குரிய இடத்தில் வாழ்விடுங்கள் அல்லது 30வருடத்திற்கும் மேலான உங்க இனம்சார்ந்த பிரட்சனைக்காவது முடிவுகிட்டுமா எனபாருங்கள் இப்படி வாய்க்கொலுப்பு சீலையில் வடிந்ததால்தான் உங்கலைப்போன்ற அரசியல்வாதிகலையும் போராட்டங்கலையும் நம்பிய மக்கள் நடுத்தெருவிலும் கூன்டுகலுக்குல்லும் வாழ்வை தொலைக்கின்ரார்கள் எதிர்மரை நிகழ்வுகள் தவிர்க்கமுடியாதெனில் எதற்கு முல்லிவாய்க்கால் முடிவிற்கு நீதிகேட்டு போராடவேன்டும் பாட நினைத்தால் கிழவிற்கும் பாடல் வரும் என்பதை மறந்து இப்படியேள்ளாம் மைக்குமுன்னால் நேரத்தைவீனடிக்காமல் வேரு வேலையிருந்தால் பாருங்க சாரே...............
ReplyDeleteபிரபா கணேசன் அவர்களே, தமிழ் மக்களின் அழிவுக்கும் அவர்களது உரிமை போராட்டத்தை சரணடைய வைத்த அரக்கன் பிரபாகரனின் செயலை நியாயப்படுத்தும் நீர்றேல்லாம் திரு. சுமந்திரன் அவர்களின் தூர நோக்குடைய, யதார்த்தமான, நீதியான, மனசாட்சியுள்ள ஒருவரின் கருத்தை விமர்சிப்பதற்கு உமக்கு எந்த தகுதியும் கிடையாது.
ReplyDeleteமுஸ்லிம் மக்களுக்கு அநியாயம் செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதை சற்று பின் நோக்கி பாரும். பிரபாகரன், ராஜபக்ச போன்றோரின் நிலை.. அதே போல் முஸ்லிம்களை புறந்தள்ளிய அரசியல் பேச்சு வார்த்தைகள்.... எனவே தான் இந்த ஐக்கிய நாடுகளின் விசாரணையும் முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை உள்வாங்க விட்டால் தோல்வியில் தான் முடியும் என்பதை தெரிவித்து கொள்வதோடு, திரு. சுமந்திரன் அவர்களின் கருத்தால் ஐ நா வின் பொறிமுறைக்குள் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டியுள்ளது அதனால் தமிழ் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற உமது கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு. நீர் மிகவும் முஸ்லிம் விரோத சக்தியும் துவேசியும் ஆகும்.
Aadu nanauthu enru praba onai alutha tham
ReplyDeleteHe does not know anything about the northern Muslims. Now he is barking for make sure the stability from their voters who came from north. He is also racist
ReplyDeleteஇவர் இரண்டும் கேட்டான் நினையான கருத்தை வேலியிட்டு இருக்கிறார், இவர் எதனை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்.1990 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்த ஒரு பிள்ளை இந்த கருத்தை சொல்லியிருந்தால் சரியன்று சொல்லலாம்.இவர்களின் நாடகம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ReplyDeletei think he is one of the member of ltte.
ReplyDeletehe is mulu loosu
ReplyDeleteவடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்து விட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடனான பிரபா கணேசனின் ஆதங்கம் எத்தனை கீழ் தரமானது என்பது "முஸ்லிம்களின் பிரச்சினையினை ஐ.நா. விசாரணை பொறிமுறையில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உருவாகியுள்ளது இதன் மூலம் தமிழ் மக்களுக்கான நியாயமான ஐ.நா. விசாரணை தடம்புரள வழிவகுத்துள்ளது" என்று கூறுவதிலிருந்து தெளிவாகின்றது. "தமிழ் மக்களுக்கான நியாயமான " என்றால் முஸ்லிம் மக்கள் நீதிக்காக போராடுவது பிரபா கணேசனின் பார்வையில் அநியாயமாகத தெரிகிறது. "தமிழ் கூட்டமைப்பிலுள்ள சில கயவர்கள் " எதிர்ப்பதால் நியாயம் அணியாயமாகி விடாது. யாரது தாளத்துக்கு பிரபா கணேசன் ஆடுகிறார் என்று அவருக்கே மறந்து போய்விட்டது போலும். " புலிகள் இன்றும் இருப்பார்களாயின் வாய் திறந்து தைரியமாக பேசுவாரா?" என்று கேட்பதன் மூலம் சொல்ல வருவது என்ன? நியாயமாகவும் நீதியாகவும் தனிமனிதன் செயல் படுவதை புலிகள் எதிர்த்தார்கள், அவ்வாறு பேசுபவர்களை கொன்றுவிடுவார்கள் என்பதையா? அல்லது பிரபா கணேசன் தானும் அந்தக் கொலைகாரக் கூட்டத்தில் ஒர் அங்கம் என்று சொல்ல வருகிறாரா? ஒருவனை அவனது பூர்விக இடத்திலிருந்து அகற்றியது அநியாயமானது என்கிறோம் ஆனால் முஸ்லிம்களின் நிலத்தை தமிழர்களுக்கு தாரை வார்க்க வில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கின்றது. உண்மை என்னவென்றால் முஸ்லிம்களின் அசையும் சொத்துக்களையும், வீட்டின் உடமைகளையும் அஸ்திவார கற்கள் உட்பட கொள்ளையடித்தது போல் நிலத்தை அவர்களால் பெயர்த்து எடுக்கமுடியவில்லை என்பதுதான்
ReplyDelete