Header Ads



ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும், 15 மில்லியன் ரூபா வழங்கப்படும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2016 ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதியாக தலா 15 மில்லியன் ரூபா வழங்கப்படும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த வருடத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதி இன்னும் கிடைக்கவில்லை எனவும் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ராஜாங்க அமைச்சர் இந்த வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை சேர்த்து அடுத்த வருடம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 15 மில்லியன் ரூபா வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.