ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 3
செல்போனை கையில் பிடித்து தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் செல்ஃபி மோகம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொள்வோருக்கு, அந்த மோகத்தில் இருந்து விடுபட ஆன்டி செல்ஃபி மாத்திரைகள் வந்துவிட்டன.
இதற்குக் கூடவா மாத்திரை என்று ஆச்சரியப்படும் நமக்கு அதில் மற்றொரு ஆச்சரியமும் சேர்ந்திருக்கிறது.
அந்த மாத்திரையின் பெயர் 'ANTI-Selfie Tabs'. மாத்திரையில் கூறப்பட்டிருக்கும் மற்றொரு தகவல், ஆண்களுக்கு 1 மாத்திரை, பெண்களுக்கு 3 மாத்திரைகள் என்பதுதான்.
செல்ஃபி மோகத்தால் ரயில் மீது ஏறியும், மலையின் உச்சியில் இருந்தும் புகைப்படம் எடுக்கும் போது பலர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த மாத்திரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment