UPFA யில் இணைந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரி, பொன்சேகாவுக்கு தொலைபேசி அழைப்பு
புதிய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை. சில அரச நிறுவனங்களில் இன்னும் மோசடிகள் நடப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய அவர்,
2010 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் கரு ஜயசூரியவும் ரவி கருணாநாயக்கவும் எனது வீட்டிற்கு வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இம்முறை பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு கூறினார்.
எனினும் இந்த அழைப்புகள் அனைத்தையும் தான் நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment