Header Ads



வடமாகாண முஸ்லிம், இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு - றிசாத் பதியுதீன்

வட மாகாணத்துக்கான தமிழ் பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நிகழ்வு நாளை (11) வவுனியா - காமினி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு முஸ்லிம்களும் பொலிஸ் சேவையில் இணைய வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பாக "வட்ஸப்" மூலமாக தகவல் வழங்கிய றிசாத் பதீயுதீன் மேலும் கூறியதாவது,

வடமாகாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய முஸ்லிம்களே பொலிஸ் சேவையில் உள்ளனர். இந்நிலையை மாற்றியமைக்க தற்போது வடமாகாண முஸ்லிம் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை வடக்கு முஸ்லிம் இளைஞர்கள் உரியவகையில் பயன்படுத்த வேண்டும்.

வடக்கு முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைவது சமூகத்திற்கும் சிறந்தது. எனவே உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து உடனடிக் கவனம் செலுத்த வேண்டும்.  பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளக்கூடிய தகமையுடைய முஸ்லிம் இளைஞர்கள் பலர் வடக்கு முஸ்லிம்களில் காணப்படுகின்றனர் எனவும் இதன்போது றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

2.........

வடமாகாணத்தினுள் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக தமிழ் பேசும் இளைஞர்களை பொலிஸ் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்காக சிறிது காலத்துக்கு முன் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. இதனூடாக சுமார் 400 இளைஞர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அவர்கள் முற்றிலும் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.