மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் கடாபி + சதாம் உசைனின் நிலை ஏற்பட்டிருக்கும் -SP
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தால் அவரது செயற்பாடுகள் தொடர்ந்திருந்தால் லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட நிலையே மகிந்தவுக்கு ஏற்பட்டிருக்கும் என்று அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனின் நிலையும் மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சக்தி மிக்க அரசாங்கம் ஒன்று உருவாக்கி ஐ.நாவை எதிர்கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதாகவும் அந்த திட்டத்தின்படி மகிந்த ராஜபக்ச வென்று மீண்டும் ஆட்சியேறி தொடர்ந்தும் அவரது செயற்பாடுகளை அவர் முன்னெடுத்திருந்தால் கடாபிக்கும் சாதமுக்கும் நடந்தது அவருக்கும் நடந்திருக்கும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Post a Comment