Header Ads



காமத் தரகர் யார்..? பாராளுமன்றத்தில் சண்டைபிடித்த ரணிலும், விமலும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய "காமத்தரகர்கள்' என்ற வார்த்தையினால் விமல் வீரவன்ச எம்.பி. கொதித்தெழுந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை சபையில் இடம்பெற்றது. 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மத்திய வங்கியின் இடமாற்றங்கள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டு கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதுடன், கூச்சல்களும் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன் கருத்தை முன்வைத்துக்கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தரப்பின் ஐ.ம.சு.மு. பக்கமிருந்து ரணிலை நோக்கி சபைக்குதவாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. 

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் "ஓமோம் உங்கள் பக்கத்தில் காமத்தரகர்கள் சிலர் இருக்கின்றனர்' என்றார். 

இதனால் கொதித்தெழுந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பினார். அதில் அவர்; "இங்கு பிரதமர் மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்து காமத்தரகர்கள் எனக்கூறி கேவலப்படுத்தியுள்ளார். இவ்வார்த்தை பிரதமரிடமிருந்து வரக்கூடாது. அத்துடன் இந்த "காமத்தரகர்' வார்த்தை பிரதமருக்கே மிகவும் பொருத்தமானது. எனவே அவர் இந்த வார்த்தையை வாபஸ்பெறவேண்டும்' என்றார். 

ஆனால் ரணில் வார்த்தையை வாபஸ் பெறாத அதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவும் இதுதொடர்பில் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.

No comments

Powered by Blogger.