பாலித தேவப்பெரும Mp யிடமிருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் கற்க வேண்டியது..!
(எஸ்.அஷ்ரப்கான்)
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும என்கிற ஓர் அரசியல்வாதி பற்றி அண்மைக்காலமாக இதயத்திற்கு ஆறுதலான, சந்தோசப்படக்கூடிய, பெருமூச்சு விடக்கூடிய விடயங்களை நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் கைக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாதம் தலைவிரித்தாடும் போதும் தர்க்கா நகர் பேருவளை போன்ற பிரதேசங்களில் உச்சகட்டம் அடையும் போதும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார் தனது பா. உ பதவியையும் இராஜினாமா செய்யத்துணிந்தார்.
கிணற்றில் அனாதவராக பல நாட்களாக கிடந்த சடலத்தை கிணற்றில் தானே இறங்கி சடலத்தை மீட்கும் பணியில் முன்னின்றார்.
கடந்த வாரம் கிராமம் ஒன்றில் கொங்க்ரீட் வீதி அமைக்கும் போது ஐந்து அங்குலத்தில் இடவேண்டிய வீதியை மூன்றரை அங்குலத்தில் இட்ட கொந்தராத்து கும்பலை களத்தில் விரைந்து கையும் களவுமாக பிடித்து தட்டிக்கேட்டார்.
நேற்றைய முன்தினம் வவுனியா வெஹரதென பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகளில் காணப்படும் பெறுமதிவாய்ந்த கருங்காலி. முதிரை போன்ற மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லும் கும்பலையும் களத்தில் விரைந்து கையும் களவுமாக பிடித்து உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இப்படித் தொடரும் அந்தப் பட்டியல். இவையெல்லாம் பார்க்கும் போது, தற்கால பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்குரிய இலக்கணத்தை உடைத்தெறிந்தவராக பாலித தேவப்பெரும உள்ளார் என்றால் மிகையாகாது.
ஆனால் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளோ நாலு வாகனங்களுடனும்இ நாப்பது பாதுகாப்பு படையினருடனும்இ பந்தோபஸ்த்துக்களுடனும் உலாவருவதையும் அடிக்கல் நாட்டு விழாக்களுக்கும் திறப்பு விழாக்களுக்கும் நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாகவும் (பிரதம அதிதின்னு அழைச்சா மட்டும் தான் போவாங்க) செல்வதையே கௌரவமான அரசியல் என்றும் ஐந்தாண்டு அஜெண்டாகவும் நினைக்கின்றனர்.
அது சரி ஊருக்கு மாதத்திற்க்கு இருமுறை விசிட் கொடுக்கும் அரசியல்வாதிகளிடமும், அவரசத்திற்கு அழைப்பேசியை தூக்கினால் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதிகளையும் வைத்துக்கொண்டு பாலித தேவப்பெருமாவின் அரசியலை எதிர்பார்ப்பது அதீத பேராசை தான்.
ஆனாலும் உலகத்திற்கே சிறந்த அரசியல் நாகரீகத்தை போதித்த இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முஸ்லிகளாகிய நாம் கூட தற்காலத்தில் நாணையமான சிறந்த அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக மாற்று மத சகோதரர்களையே தேட வேண்டியுள்ளது என்பதே இன்றைய முஸ்லிம் அரசியலின் கேவலம் எனலாம்.
இஸ்லாமிய அரசியல் தலைமைகளின் பொறுப்பு என்பது தனது தேசம் தனது இனம் என்று இல்லாமல் இந்த பூமி அதில் வாழும் மனித இனம் அதையும் தாண்டி இந்த பூமியில் வாழும் பிற உயிரினங்களின் நலன்களில் கவனம் செலுத்துவதும் போறுப்புக்கூறுதுமாகும். இந்த பூமியின் 3ஃ1 பகுதியை ஆட்சி செய்த உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வை பயந்துகொண்ட இரண்டு சம்பவங்கள்: 1) தெருவில் பிச்சை எடுத்த ஒரு யூத வயோதிபரை கண்டதும் மறுமையில் அல்லாஹ்விடம் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து பைத்துல்மாலிருந்து அவருக்கு நிதி வழங்கினார். 2) பாலைவனத்தில் ஒரு ஒட்டகம் சறுக்கி விழுந்தாலும் அதற்கு பாதையை செப்பனிட்டு கொடுக்கவில்லையா என்று மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்று பயந்தார்கள்.
இந்த பதிவின் மூலம் பாலித தேவபெரும போன்ற அரசியல்வாதிகளைப் போன்று எமது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மிளிர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா ? இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தனக்கு எதிராக தனத தரத்தினை விட அதிகமான தகுதியுடன் ஒருவன் முன்வந்தால் அவனை அடியோடு அழித்து மக்கள் மத்தியில் செல்லாக்காசாக ஆக்கும் எமது முஸ்லிம் தலைமைகள். நாம் எங்கபோய் முறையிடுவது நமது சகோதரங்களே இப்படி என்றால்...

தலைவர் அஸ்ரப் அவர்கள் பாதையில் தனிக்கட்சிகள் அமத்தும் அவர்கட்சியின் தலைமைப்பொருப்பேற்ரும் இருக்கும் தலைமைகள் எவரும் அவர் பன்புகள் எடுத்துக்காட்டுகள் போல் செயல்பட்டிருந்தால் அனைத்து முஸ்லிம் கட்சிகலுமே மக்கள் மனங்களீள் செல்வாக்கு செலுத்தியிருக்கும் ஆனால் எல்லாமே இங்கு அரைகுரைகள்தான் மேலும் தேவபெருமையின் அரசியல்பயணம் நிட்சயமாக அவர்பெயருக்கு ஏற்றவாரு குருகியகாலத்திக்குல் அவருக்கு பெருமை சேர்க்கும் என்பதில் சந்தேகமேகிடையாது
ReplyDeletewell said, over to you muslim politicians
ReplyDeleteReally well said....Muslim politician must concern this
ReplyDeleteநம் அரசியல்வாதிகளிடம் குறைகள் உண்டு ஆனால் வழிப்படையாக செய்யவில்லை என்பதுதான் மக்களின் ஆதங்கம்.தெவலப்பெருமை பாராட்டப்பட வேண்டிய ஒரு அரசியல்வாது அதில் மாற்றுக்கருத்து இல்லை.அதேவேளை நம்மவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்ய வேண்டும் என்று இல்லை.எல்லாவற்றையும் வெளிப்படையாக சையப்போனால் இந்த நாட்டில் முடியாது என்பதையும் நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் பெருமைக்கு மாவு இடிக்க முடியாது.வெளிப்படையாக செய்ய வேண்டியதை வெளிப்படையாகவும் இரகசியமாக செய்ய வேண்டியதை இரகசியமாகவும் செய்ய வேண்டுமே தவிர கூக்குரல் விட முடியாது.சேவையில் இக்ஹ்லாசும் வேண்டும்.
ReplyDeleteஉண்மையில் நல்லதொரு பதிவு ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவெல்லாம் ஒரு பெரிய விடயமாகவே தெரியாது ஏதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டு கருத்தாகவே இதனை பார்பர்.
ReplyDeleteமக்கள் சேவைக்கு பொருப்பானவர்கள் அவர்கள் குரைகள் கன்டு அதை பூர்த்திசெய்யும் போது அதில் உள்ள பிழைகள் அதற்கு நியமிக்கப்பட்டவர்கள் விட்ட விடும் தவருகள் பிடிகப்பட்டு சரிசெய்யப்படவேன்டும் அன்மையிள் வீதிப்பனியில் கொங்ரீட் இட்டுக்கொன்டிருந்ததை பார்த்து அதன் தவருகலை சுட்டிக்காட்டினார் இது பெருமைக்கு மாவிடிக்கும் செயலா?மக்கலுக்கு நல்ல வீதி மாதங்கள் அல்லாது பலவருடங்கள் நீடிக்கவேனும் என்ரு செய்த செயலா?
ReplyDeletemustafa, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் வாதிகள், தமது பணிகளை வெளிப்படையாகத்தான் செய்ய வேண்டும்.
ReplyDeleteதனிநபர்கள் தமது சொந்தப் பணத்தில் செய்யும் வேலைகள், பணிகள் போன்றவற்றை வேண்டுமானால் தனிப்பட்ட விதமாக செய்துவிட்டுப் போகலாம்.
ஆனால், ஜனநாயக நாட்டில், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், சேவைகள், பணிகள் மட்டுமல்ல அவர்களின் தவறுகள், மோசடிகள் கூட மக்களினின்றும் இரகசியமாக இருக்க முடியாது.
பாதுகாப்புத் தீர்மானங்கள், இராஜதந்திர நகர்வுகளை வேண்டுமானால் பகிரங்கமாக செய்யாமல் இருக்கலாம், ஆனால் மக்கள் தொடர்பான விடயங்களில் இரகசியமாக செய்வதற்கு ஒன்றுமில்லை, அப்படி யாராவது செய்ய முயன்றால், அதில் எதோ ஒரு மர்மம் இருக்கின்றது, அல்லது எதையும் செய்யாமல், நான் இரகசியமாகவே செய்கின்றேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றார் என்று அர்த்தம்.