சுவிஸ் குடியுரிமை ரத்து, சாப்பிடாமல் அழுது கொண்டிருந்த கீதா M.P.
அமைச்சர் ஒருவர் என்னை அரசியலிலிருந்து ஒதுக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சர் நான் அரசியலில் ஈடுபடுவதனை விரும்பவில்லை.
நான் பொதுத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த போது சுவிட்சர்லாந்து குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
உண்மையில் தற்போது எனக்கு சுவிட்சர்லாந்தின் குடியுரிமை கிடையாது.
சுவிட்சர்லாந்து குடியுரிமையை நான் ரத்து செய்து கொண்டேன்.
குடியுரிமையை ரத்து செய்வதற்காக ஆவணங்களை சமர்ப்பித்த தினம் கடுமையான துயரம் ஏற்பட்டது, நான் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தேன்.
நான் அரசியலில் ஈடுபடுவது பிடிக்காத அமைச்சர் என்னை எப்படியாவது வெளியேற்ற முயற்சிக்கின்றார் என கீதா குமாரசிங்க சிங்கள ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

Post a Comment