Header Ads



"அண்ணன் என்னடா, தம்பி என்னடா" எல்லோரும் சிக்குவார்களா..?

கடந்த ஆட்சியின் போது மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ச அரசாங்கத்தின் சாட்சியாளராக நீதிமன்ற செயற்பாடுகளில் செயற்படவுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கியவர்களான சஜின் வாஸ் குணவர்தன மற்றும் துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பிரியத் விக்ரம ஆகியோர் அரசாங்க சாட்சியாளர்களாக பல ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமான CSN தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பில் இதுவரையில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அந்த தொலைக்காட்சி நிறுவனம் ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கிய இடத்தில் நடத்தி செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுட.

இதன்போது தனக்கு ஒன்றும் தெரியாது அனைத்தும் மஹிந்த ராஜபக்சவும் அவரது மகன்மார்களினால் மேற்கொண்டதென அவர் குறப்பிட்டுள்ளதாக விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள 29 பேர்ச்சஸ் காணி டீ.ஏ.ராஜபக்ச அறக்கட்டளைக்கு 2003ஆம் ஆண்டும் 30 வருடங்களுக்கு குத்தகையின் கீழ் வருடத்திற்கு 163,125 பணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவராக செயற்பட்ட 2003ஆம் ஆண்டில் இந்தக் காணியை வழங்குமாறு அக் காலக்கட்டத்தில் மேல் மாகாண பிரதேச அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட எம்.எச்.மொஹமட் கேட்டுக்கொண்டுள்ளமைக்கமைய அமைச்சரவை தீர்மானத்திற்கமைய அக் காணி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவ்விடத்தை வழங்கும் போது குறித்த சொத்துக்கள் ராஜபக்ச அறக்கட்டளையை தவிர வேறு எதற்கும் பயன்படுத்த முடியாதென ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ராஜபக்ச அறக்கட்டளைக்கான எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறாத நிலையில் CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதான அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது முற்றிம் சட்ட விரோதமான செயலாகும். ராஜபக்ச அறக்கட்டளையின் தலைவர் சமல் ராஜபக்சவிடம் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தனக்கு ஒன்றும் தெரியாதெனவும், மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது மகன்மார்களுமே அனைத்தையும் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ராஜபக்ச அறக்கட்டளையின் பொருளாளராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் கணவரான லலித் சந்திரதாஸவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் தனக்கும் இது தொடர்பில் ஒன்றும் தெரியாதென தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அறக்கட்டளை வங்கி கணக்குகளின் நடவடிக்கை தொடர்பில் எவ்வித தகவல்களும் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார்.

ராஜபக்ஷ நினைவு அறக்கட்டளை கூட்டிணைத்தலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தின் விதிமுறைகளுக்கமைய அனைத்து கணக்கு நடவடிக்கைகள் பதிவாகியிருக்க வேண்டியதோடு ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

எப்படியிருப்பினும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி அரசாங்கம் மாற்றம் ஏற்பட்டதனை அடுத்து ஜனவரி மாதம் 14ஆம் திகதி அவசரமாக CSN தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ராஜபக்ச அறக்கட்டளைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.