மகிந்தவிடம் மீண்டும் விசாரணை
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இம்மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழு, மிரிஹானையில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதனை அடுத்து நேற்றுமுன்தினம் (30), ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற பிரசார நடவடிக்கைகளுக்காக பணம் வழங்கியமை தொடர்பில், ஐ.ம.சு.முவின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த எம்.பி. பாரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
இதன்போது அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவே மஹிந்த ராஜபக்ஷ எம்.பி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalutha thainth katta erumbana katha mathri Ivar appadi nadanthu vittathu eppadithan parlimentuku moonja mudama vararo
ReplyDelete