மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்ட, மொபிட்டல் தொடர்பில் விசாரணை
இலங்கை மொபிட்டல் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் ரூபசிங்கவுக்கு எதிராக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு விரிவான விசாரனைகளை ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் நடவடிக்கைகளுக்காக இலங்கை மொபிட்டல் நிறுவனத்தின் பணம் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் பெரும்பான்மை பகுதியை கொண்டுள்ள இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்கு சொந்தமான மொபிட்டல் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ரஞ்சித் ரூபசிங்கவின் உத்தியோகபூர்வ அதிகாரத்தை பயன்படுத்தி, நிறுவனத்தின் பணத்தை, அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கருத்திற்கொள்ள கூடிய பல சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மொபிட்டல் நிறுவனத்தின் பிரச்சார ட்ரெட் வண்டிகள் சட்ட விரோதமான முறையில் சுதந்திர முன்னணி வேட்பாளருக்கு வழங்கப்பட்டமை மற்றும் அதற்காக மொபிடேல் நிறுவனத்தின் பணம் 2.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
அத்துடன் தொலைத்தொடர்பு ஆணையத்துடன் இணைந்து ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் நோக்கில் நாரஹென்பிட்டியவில் நடத்தி செல்லப்பட்ட சட்ட விரோத செயற்பாட்டு சேவைக்காக மொபிட்டல் நிறுவனத்தின் ஊழயர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வியாபாரத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் நடவடிக்கைகளுக்காக மொபிட்டல் நிறுவனத்தின் 15 மில்லியன் ரூபா செலவிட்டு நாற்காட்டி அச்சிடப்பட்டுள்ளது.
மொபிட்டல் நிறுவனத்தில் பிரச்சார விளம்பர பலகைகள் ராஜபக்சர்களுக்கு வழங்குவதல், நிறுவனத்தில் பிரச்சாரங்கள் மற்றும் அச்சிடல் நடவடிக்கைகளுக்கு கேள்விப்பத்திரம் அழைப்பின்றி குமா ஸ்டிக்கர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
CSN தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வருடம் முழுவதும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முறையிலிருந்து விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச ஆட்சியில் மாத்திரமின்றி 100 நாள் அரசாங்கத்திலும் பல்வேறு அரசியல் நெருக்கங்கள் மற்றும் நிதி சலுகைகள் தொடர்பில் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் ரஞ்சித் ரூபசிங்கவுக்கு எதிராகவும் விசாரணை நடவடிக்கை தவிர்க்கப்பட்டாலும் இம்முறை முக்கிய பல சாட்சிகளுடன் சட்டத்தை சரியான முறையில் செயற்படுத்தவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Post a Comment