Header Ads



வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், நிபுணத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும்...!

-Inamullah Masihudeen-

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக விரிவானதும் துள்ளியமானதுமான தரவுகளுடன் கூடிய ஆய்வுப் பணியொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க பேராசிரியர் கலாநிதி ஹஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் காலவரையறைகளுடன் கூடிய அரசியல் சார்பற்ற ஒரு நிபுணத்துவக் குழு அமைக்கப்படுதல் வேண்டும்.

அரச அனுசரணையுடன் உத்தியோகபூர்வமாக அமைத்துக்கொள்ளவும் அதற்குத் தேவையான காரியாலயம் மற்றும் வளங்களைப் பெற்றுக்கொள்ளவும் சகல முஸ்லிம் அரசியல் தலைமைகளும் குறிப்பாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் ஒன்றிணைந்து உடனடியாகவே மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும்.

அவ்வாறான பிறிதொரு நிபுணத்துவக் குழுவினை கிழக்கு மாகாண முஸ்லிம்களது காணி மற்றும்ஏனைய விவகாரங்கள் தொடர்பாக நாம்அமைத்துக் கொள்தல் அவசியமாகும்.

இலங்கை அரசினால் அமைக்கப்படவுள்ள உள்ளக பொறிமுறையின் கீழ்வரும் உண்மைகள் கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னாள் சர்வதேச தராதரம் வாய்ந்த எமது சாட்சியங்களை தராதரங்களுடனும் தரவுகளுடனும் ஆவணப்படுத்தி சமர்பிப்பதற்கான ஏற்பாடுகளை இப்பொழுதே நாம் மேற்கொள்ளாவிடின் காலம் தாழ்த்தி கைசேதப்படும் நிலைவரும்.

இதுவரைகாலமும் இவ்வாறான காத்திரமான முயற்சி உரிய மூலோபாயத் திட்டமிடல்களுடன் எந்தவொரு தரப்பினாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இனரீதியான அரசியல் சாயம் பூசாது மொத்த தேசத்தினதும் சமாதன சகவாழ்வு, அரசியல் ஸ்திரத் தன்மை, பொருளாதார சுபீட்சம் என்பவற்றை முதன்நிலைப்படுத்தி தேசத்தின் சகல முற்போக்கு சக்திகளையும் அணுகி மேற்படி விவகாரத்தை நாம் சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் கையாள வேண்டும்.

அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் முடியுமான ஒத்துழைப்பை வழங்க நாங்களும் தயாராக இருக்கின்றோம்.

இன்ஷா அல்லாஹ்!

No comments

Powered by Blogger.