ஜனாதிபதி மைத்திரி அதிருப்தி..?
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் தமது கட்சி உறுப்பினர்களின் செயல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர்க்குற்ற விசாரணை சர்வதேச நிலையில் மேற்கொள்ளப்படவிருந்தமையை தற்போதைய அரசாங்கத்தினால் உள்நாட்டு விசாரணையாக மாற்ற முடிந்துள்ளது.
இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்
இந்தநிலையில் விசாரணை உள்ளுர் மட்டத்துக்கு கொண்டு வரப்பட்டவுடன் ஐக்கிய தேசியக்கட்சியினர் தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் சாதகமான வெளிப்பாட்டை காட்டவில்லை. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மாத்திரம், சாதகமான கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் தமது கட்சியினர் ஏனைய உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் குறித்து சாதகமான நிலைப்பாட்டை வெளியிடாமை குறித்து ஜனாதிபதி அதிருப்தி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment