Header Ads



ஜப்பான் பாரளுமன்றத்தில் பிரதமர், ரணில் பெறவுள்ள கௌரவம்

ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற கௌரவத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொண்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (3) உத்தியோகபூர்வ விஜயமாக ஜப்பான் சென்றடைந்துள்ளார்.

இதன்போது அவர் ஜப்பான் நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.

டயட் என்றழைக்கப்படும் ஜப்பான் நாடாளுமன்றத்தில் இதற்கு முன்னர் இரண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் மாத்திரமே உரையாற்றியுள்ளனர்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோரே அவர்களாவர்.

இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற கௌரவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிட்டவுள்ளது.

அத்துடன் ஜப்பானியர்களின் மனமார்ந்த கௌரவத்துக்கு உரித்தான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவிற்குப் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு அளிக்கப்படும் உயர்ந்த மரியாதை, கௌரவம் பிரதமர் ரணிலுக்கு ஜப்பானில் வழங்கப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.