Header Ads



ஆசாத்துக்கு ஆதரவாக ஈரானுடன், ரஷ்யா இணைவதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் - ஒபாமா

சிரியா அதிபர் அஷாத்துக்கு ஆதரவாக ரஷ்யா ஈரானுடன் இணைவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்கள் சந்தித்த அதிபர் ஒபாமா பேசுகையில், சிரியாவில் பிரச்சனை தொடங்கிய காலத்திலிருந்தே அந்நாட்டு அதிபருக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.

ஆனால் தற்போது ஐஎஸ் இயக்கத்துக்கும், தீவிரவாதத்திற்கும் எதிராக செயல்படுவதாக ரஷ்யா நாடகத்தை நடத்துகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவை குற்றம்சாட்டுவதை ரஷ்யா அதிபர் புடின் நிறுத்த வேண்டும், ரஷ்யாவின் நடவடிக்கைகள் மூலம் ஐஎஸ்ஐ வலுவடையவே செய்யும்.

ஆசாத்துக்கு ஆதரவாக ஈரானுடன் ரஷ்யா இணைவதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

இதன்மூலம் சிரியாவில் அமெரிக்கா- ரஷ்யா இடையே மறைமுகப் போருக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.