Header Ads



ஒபாமா அவமானப்படுத்தப்பட்டாரா..? (படம்)

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் சபை கூட்டத்தில் பங்கேற்ற ஒபாமாவை தென் ஆப்பிரிக்க அதிபர் அவமானப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகளின் சபையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கடந்த 28ம் திகதி அமெரிக்க அதிபரான ஒபாமாவும் தென் ஆப்பிரிக்க அதிபரான ஜேகப் சூமாவும் நேரடியாக சந்திப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக உலக தலைவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டுருந்ததால், ஜேகப் சூமா ஒரு மேசையில் அமர்ந்தவாறு தனது கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, ஜேகப்பை சந்திப்பதற்காக தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த ஒபாமா, ஜேகப்பிடம் மரியாதை நிமித்தமாக கை குழுக்க முயன்றுள்ளார்.

ஒபாமாவின் இந்த செயலுக்கு எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தாமல், மிக சாதரணமாக கைப்பேசியில் பேசிக்கொண்டே ஒபாமாவுடன் கை குழுக்கியுள்ளார்.

இதனை கண்ட ஒபாமா சிரித்துக்கொண்டு ‘யாருடனோ மிகவும் பிஸிகா பேசிக்கொண்டு இருக்கிறார்’ என சைகையில் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார்.

ஒபாமாவிடம் கை குழுக்கியபோது தென் ஆப்பிரிக்க அதிபர் போதிய ஒழுக்கத்தை பின்பற்றவில்லை என தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் ’தி டைம்ஸ்’ என்ற பத்திரிகை ‘உலக தலைவர்கள் பங்கேற்றுள்ள முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஒபாமாவை அவமானப்படுத்தும் விதத்தில் செயல்பட்ட தென் ஆப்பிரிக்க அதிபருக்கு ஒபாமா முக்கியமா அல்லது அவர் கைப்பேசியில் பேசிக்கொண்டுருந்த ‘அந்த நபர்’ முக்கியமா?’ என செய்தி வாசிப்பாளர்களிடம் கேள்வி ஒன்று எழுப்பியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வாசகர்கள் கூறியபோது, எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும் அல்லது வயது குறைந்தவர்களாக இருந்தாலும், மரியாதை நிமித்தமாக கை குழுக்க வந்தபோது ஜேகப் கைபேசியில் பேசிக்கொண்டு இருந்தது நாகரீகமானது அல்ல என கூறியுள்ளனர்.

ஆனால், தென் ஆப்பிரிக்க இளைஞர்கள் கூறியபோது ‘எங்கள் நாட்டு அதிபர் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது தான் ஒபாமா கை குழுக்க செல்ல வேண்டுமா? ஜேகப் பேசி முடித்த பிறகு அவரிடம் சென்று இருக்கலாமே’ என பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னும் சில இளைஞர்கள் ‘ரஷ்ய அதிபரான புடினுடன் ஜேகப் பேசிக்கொண்டு இருந்ததால் தான் அவரால் உடனடியாக இணைப்பை துண்டிக்க முடியவில்லை’ என வேடிக்கையாக பதில் கூறியுள்ளனர்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இரு நாட்டு பொது மக்களிடம் பலத்த விவாதங்களை எழுப்பி வருகிறது.


6 comments:

  1. இதெல்லாம் ஒரு விஷயமா..? ஒருவேளை மறுமுனையில் தெ.ஆ. தலைவரின் பழைய பாடசாலைக்கால காதலி பேசிக்கொண்டிருந்திருப்பார். பழைய காதலியை விடவா சக நாட்டுத் தலைவர் பெரிது..?

    ReplyDelete
  2. Obama is a very simple person and he would not take this as a serious matter at all. Why are the others beating about the bush?
    ஒபாமா மிகவும் சாதாரணமான ஒரு மனிதன். அவர் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்து இருக்கவே மாட்டார். மற்றவர்களுக்கு ஏன் இத்தனை கடுப்பு?

    ReplyDelete
  3. உலக நாட்டுத் தலைவர்கள் என்று வரும் பொழுது, அதற்குரிய மரியாதை, ஒழுங்குகளை இரு தரப்பினருமே பேணிக்கொள்ள வேண்டும், அதுதான் அழகானதும், முன்மாதிரியானதும் ஆகும்.

    ReplyDelete
  4. It is politically incorrect. Obama is=The President of USA not just Obama. Furthermore, this happened in UN meeting not in a golf club.

    ReplyDelete
  5. Jesslya Jessly go crazy

    ReplyDelete
  6. It is not proper for any one to disturbe, a person who is already communicating with another individual.

    OBAMA as a high profile, should know this descipline.. So if any body to find mistake the mistake is not form South african but from American leader.

    No double standard for elites.

    ReplyDelete

Powered by Blogger.