பி.ஜே.யின் அதிரடி விளாசல்கள்..!
ஜூனியர் விகடன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பாளர் பி.ஜைனுல் ஆபிதீன்...!
''இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப் படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம், தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை.
கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக் கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.
''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?''
''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது.
நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ் நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்.
அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்து விடுவதும் பிறகு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும் போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''
''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''
''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது.
நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச் செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது.
தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன் உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்த போதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய்’ என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் தான், தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.
தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது.
பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம்.
இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''
''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''
''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்த வர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவு உள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பா ன்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்?
நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலை செய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ள சகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

Super mashaallah matha thalaivargal ippadi arivodan irukkanum
ReplyDeleteVery good answer Mov P..Jainulabdeen (Ulavi) சிலருக்கு இதைப்பார்த்தால் அரம்பிக்குமே சொறி (அரிப்பு)
ReplyDeleteWell said pj in this matter. Even though I do not agree some of your Islamic matters.
ReplyDeleteசில இஸ்லாமிய கருத்துக்களில் நான் PJ மௌலவி அவர்கலுடன் உடன் பாடு இல்லை என்றாலும் இது போன்ற விடையங்களை அவர் அடுக்குவது உண்மையானதே. இது போன்று தெளிவாக ஆதாரத்துடன் பதில் அளிக்கப்படும் போது மதங்களிடையே மோத விட்டு அரசியல் நடத்தும் நயவஞ்சக போக்காலார்களை பெரும்பான்மை/சிறு பான்மை சமும் அடையாளம் கண்டு கொள்ளும். அப்போதுதான் போலிஸ் முரையாக விசாரித்து யார் செய்தார் என்று குற்றவாளிகளை கண்டு கொள்ளுவதக்கும் பொது மக்கள் சட்டத்தை தன் கையில் எடுக்காமல் இருக்கவும் வாளிவகுக்ம்
ReplyDeleteWelldone said...
ReplyDeleteNizar....can you understand yourself....what you have written...by you..??
You are the one critizing quran.....!!! by your bad & low level knowledge...!!!
Come on..wakeup from bad thinking.......try to learn what is PURE ISLAM is saying...this is you must do...otherwise Allah will ask you...!!
பீ ஜே வை திட்டி ஒருவன் facebookபக்கத்தில் எழுதி அவருடைய புலம்பலை பாருங்கள் என்றும் அவருடைய ஒரு பயான் பகுதில் ஒரு துண்டை வீடியோவாக இணைத்து போட்டு இருந்தான் இவன் ஆரம்பத்திலும் கடைசியிலும் உள்ள துண்டை வெட்டிப்போட்டு பதிவு செய்து இருக்கிறான் ஆனால் அவன்ட கேட்ட காலம் வெட்ட வேண்டிய பகுதி வேட்டுப்ப்டவில்லை இவன் எழுதினதுக்கும் அவர் பேசுவற்கும் வித்தியாசம் இருந்தது.இவனை எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்று நான் பின்னூட்டம் எழுதினேன் உடனே அதை அளித்து விட்டான்.ஒரு உண்மையான முஸ்லிமாக இருந்தால் குறையை சுட்டிக்காட்டு ஏன் ஒரு முஸ்லிம் மீது அவதூறு செலுத்துவது இது பற்றி கியாமத் நாளில் அல்லாஹ் கேட்க மாட்டானா?வீணாக யாரும் பழி சுமத்தாதீர்கள்.
ReplyDeleteஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
ReplyDeleteஅதுபோல ஒரே சகதியில் உழலும் விலங்குகள்தான் சகல மதஅடிப்படைவாதிகளும்.
சகதியில் உழலும் ஒரு வெள்ளைநிற விலங்கு கருமைநிற விலங்கைப் பார்த்து கேலிசெய்து கொள்வதைப் போலிருக்கின்றது இவர் இந்து மதவெறியர்களைக் குற்றம் சொல்வது. மதம் மட்டுமே வேறு. மற்றப்படி மனிதத்தை அழிக்கும் மதவெறியென்னவோ இரண்டு தரப்புக்கும் ஒன்றுதான்.
ஜ ஜ மத அடிப்படை வாதிகள் என்று முஸ்லிம்களை சொல்ல உனக்கு எந்த அருகதையும் கிடையாது இத்தோடு உன் வெறியை நிறுத்திக்கொள் நீ ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு தீவரவாதி என்பது தெளிவாக தெரிகிறது.உனக்கல்லாம் மரியாதை கொடுத்ததுதான் நாங்கள் செய்த தப்பு வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்.ஞ்ஞானம் கெட்ட வடியில் பேசுவதற்கு இடம் வைக்காமல் இஸ்லாத்தை தூத்தரிக்க நீ யார் முஸ்லிம் பெயரில் வந்து தரங்கெட்ட வேலைகளை பார்த்து ரசிப்பது மரியாதையாக இதோடு இருத்திக்கொள்.
ReplyDeleteNizar! நீங்கள் தான் "தெய்வத்துக்கு புன்னாக்கு தீணி" என்று மற்றுமொரு பின்னூட்டத்தில் கூறியிருந்தீர்கள்.
ReplyDeletePJ is not 100% we all know that and he doesn't represent the whole of Islam. So he me do mistakes. That's not the point here.
Who has guts to talk like him ? சண்டை வரும் என்று உண்மையை சொல்லாமல் இருப்பது இயலாமையாகும்.
பின்னூட்டம் எழுதிய அட்டைக்கு பட்டை தீட்டினாலும் திருந்தாது போலிருக்கே!!!!
Mustafa Jawfer don't get emotional! நாங்கள் கோப்ப்படுவது அவர்களுக்கு தீனி போடுவது மாதிரி.
ReplyDeleteஇஸ்லாமியப் பெண்களை ஆண்கள் அடக்குகிறார்கள் என்பதை உங்கள் இந்த angry comment ஐ காட்டியே நிரூபிக்கப் பார்ப்பார்கள்.
So don't get tension. Abu Jahl, Hinda வை விடவா இவர்கள் இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் ?
No matter however they plan Islam will win.
Allah says in the Quran " You plan , we plan, Allah is the best of planners "
well said.... Mustafa Jawfer. Izu oru lady peyaril ulaawarum NAASTEEGAN. intha photo iwaludaiyazu illa Oru INDONESIA pirajain photo waaha irukkalaam,
ReplyDeleteசகோதரர்களே இவளுக்கு நான் எழுதும் ஆகக்குறைந்த வார்த்தை இதுதான்.இதை விட குறைவாக இழுத ஏன் மனம் இடம் தராது.ஒண்டு இவள் முஸ்லிம் அல்ல என்று வந்தால் அதற்க்கு ஏற்ற்றாப்போல் நாம் பதில் சொல்ல முடியும் ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு யாரை எமற்றுகிறாள்.இதோடு இருத்த வேண்டும் இல்லை என்றால் இதை விடவும் காரசாரமான வார்த்தை பிரயோகம் வரும் என்பதை jaffnamuslim இணைய தளத்துக்கும் வாசகர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.ஏன் ஆதங்கத்தை புரிந்துகொண்ட சகோதரர்களுக்கு நன்றி
ReplyDeleteஅடடா!
ReplyDeleteஇதென்ன.. முஸ்தபா, இப்படி டென்ஷனாகின்றீர்கள்..?
கருத்தை கருத்துக்களால் எதிர்த்து பின்னூட்டமிட்டுப் பழகுங்கள். வீதியில் நீங்கள் செல்லும் நேரத்தில் 'ஏய் திருடா!' என்று கூப்பிடும் குரல் கேட்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நீங்கள் ஏன் திரும்பிப்பார்க்க வேண்டும்..?
அதுபோலத்தான் 'மதவெறியர்கள்' என்று கூறினால் உங்களுக்கு ஏன் கோபம் வந்து பீபி ஏறுகின்றது..? அப்படியானால் நீங்களும் ஒரு மதவெறியரா..? மனிதன் மத அபிமானியாக இருக்கலாம் மதவெறியனாக இருக்கக்கூடாது என்றுதான் பொதுவாக எதிர்பார்ப்பார்கள். கிரிக்கட் ரசிகனாக இருந்தால் பாதகமில்லை. கிரிக்கட் வெறியனாகவோ பைத்தியமாகவோ இருந்தால்தான் பிரச்சினையே..
ஆகவே டேக் இற் ஈஸி முஸ்தபா..!
"முஸ்தாபா.. முஸ்தாபா டோன்ட் வொர்ரி முஸ்தபா!
பீபி எகிறலெல்லாம் வேணாம் முஸ்தபா!"
எங்களுக்கு தெரியும் மரியாதையாக வாய பொத்திட்டு இருந்தால் போதும் ஜ ஜ
ReplyDeleteசகோதரர்களே யாருக்கு எப்படி பதில் சொல் ல வேண்டுமோ அப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் மனிதனுக்கு பதீில் சொல்வதுபோல் மாட்டுக்கு கழுதைக்கு நாய்களுக்கல்லாம் பதில் சொல்லி விளங்காது
ReplyDeletemustafa போன்றவர்கள் வீடுகளிலும் பெண்களை அடக்கி வைப்பதை சரி என்று நம்பும் கொள்கை கொண்டவர்களாக இருப்பதால், அதன் தாக்கங்கள் பொது இடங்களிலும் தெளிவாக வேளிப்படுகின்றன.
ReplyDeleteஒரு பெண் கேள்வி கேட்கின்றாள், ஒரு பெண் தங்களின் அறிவை சவாலுக்கு உட்படுத்துகின்றாள் என்னும் பொழுது இவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் போய்விடுகின்றது.
இதகுப் பெயர் ஆணாதிக்கம்.
பெண்களை மிருகங்கள் போன்று கருதும் அதே அரேபிய மனநிலை இங்கேயும் எதிரொலிக்கின்றது.
ReplyDeleteபெண் பெண்ணாக இருக்க வேண்டும் இங்கு யாரையும் அடக்க வரவில்லை இஸ்லாத்தின் மீதும் குரான் ஹதீஸ் மீதும் யாரும் விளையாட வந்தால் கடுமையான சொற்பிரயோகம் வரும் என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.நிலவனும் ஜ ஜ யும் யாரு என்பது நன்றாக புரிந்து விட்டது யாக்கிரதை
ReplyDeleteசகோதரர்களே ஆத்திரப்படவேண்டாம் அடையாளப்படுத்தி வையூங்கள் அது போதும் அடிக்கடி இவர்களின் நோக்த்தை வெளியிடும் வகையில் உங்கள் கருத்துக்களை பதியூங்கள் அப்போது முஸ்லிம்கள் விளங்கிக் கொள்வார்கள் அடுத்தது நமக்கு சதிசெய்பவர்கள் யாராக இருந்தாலும் அல்லாh இருக்கிறான் என்று பொறுத்துக் கொள்ளுங்கள்
ReplyDeleteMustafa Jawfer! பார்த்தார்களா? நான் கூறியது போல் உங்களின் இந்த கோபத்தை வைத்தே நீங்கள் பெண்களை அடக்கி வைப்பவர் என்று சொல்வார்கள் என்று சொன்னேன். அதேப்போல நடந்துவிட்டதல்லவா?
ReplyDeleteThis is the technique they use. They want you to get angry and go out of control then they will hide everything whatever happened before and show you as a person who gets angry for nothing and a person who control women.
In any situation don't get tension.
These people are not bad as Abu Jahl and Hinda! These two cannot do any harm to Islam.
Allah says " They planned, we plan, we are the best of planners"
They try to show Islam opress women but 80% of people who revert to Islam are women.
They planned the 9/11 what happened after that ? Everyone started to learn Islam and large number of people revert to Islam. So be cool.
நண்பர்களே நீங்களும் கோபத்தை அடக்கி கொண்டுதான் எனக்கு புத்தி சொல்கிறீர்கள் நன்றி உண்மையில் இவ்வாறானவர்களுக்கு எந்த மன்னிப்பும் கொடுக்க முடியாது ரசூலுல்லாவை விட எனக்கு மனைவி மக்கள் பெரிதாக தெரியவில்லை.அதனால் எவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்க நான் தயார் இல்லை ஜ ஜ நிலவனும் ஒன்றுதான் இவர்கள் இஸ்லாமிய எதிரிகள் அவர்களை கையாள வேண்டிய முறைப்படிதான் கையாள வேண்டும் அபு ஜாஹிலை,உமையாவை,உதுபாவை சேபாவை (ரலி )என்றா சொல்வது கேவலம் கெட்டவனை கேவலமாத்தான் பேசவேண்டும்
ReplyDeleteDon't say that! You don't know may be Nilavan can become a Muslim and he can be better than us in front of Allah.
ReplyDeleteOnce umar ( ra) wanted to kill prophet (sal) later he become the second kalifa one of the person whose been told before hand that he will enter heaven.
So think twice before you say. Please
Nilavan and JJ are the same figure, anti-muslims
ReplyDelete