மஹாவலி கங்கையில் குதித்த யுவதி -காப்பாற்றிய பொலிஸார் + பிரதேசவாசிகள் மீது தாக்குதல் (படங்கள்)
கண்டி - தென்னக்கும்புர பாலத்திலிருந்து மஹாவலி கங்கையில் குதித்த யுவதி ஒருவரை காப்பாற்றிய பொலிஸார் மற்றும் பிரதேச மக்களை குறித்த யுவதி தாக்கியுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பலகொல்லை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு ஆற்றில் குதித்துள்ளார்.
குறித்த யுவதி மீது சந்தேகம் கொண்ட பிரதேச வாசிகள், யுவதியை கண்கானித்து பின் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த யுவதி ஆற்றில் குதித்த போது உடனடியாக காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காப்பாற்ப்பட்ட பின்னர் யுவதி அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளதுடன், அவரை காப்பாற்றியவர்களை தாக்கியும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment