இலங்கை நீதிமன்றத்திற்கு வந்த, வித்தியாசமான மனு
திடீர் விபத்துகளில் போதும் மற்றும் பலவிதமான நோய்களின் காரணமாக பலியாகுபவர்களின் அவயவங்களை பாதுகாத்து வகைக்க கூடிய வங்கிகளை அமைப்பதற்கு உத்தரவிட கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு ஐந்து, ஹெவ்லொக்கைச் சேர்ந்த பெண்னொருவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபர், நீதிமன்ற மற்றும் பௌத்த சாசன அமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஸ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவசர தேவைகளின் போது நோயளர்களுக்கு இரத்தத்தை பெற்றுகொள்ள இரத்த வங்கி செயற்படுகின்ற போதும், சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகளை பெற்றுக்கொள்ள அவ்வாறான இடங்கள் இல்லை எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment