நிந்தவூர் வைத்தியசாலையின், புதிய அத்தியட்சகராக சகீலா இஸ்ஸதீன் நியமனம்
-மு.இ.உமர் அலி-
இதுகாலவரை பிரதேச வைத்தியசாலையாக இருந்த நிந்தவூர் வைத்தியசாலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆதார வைத்தியசாலை-தரம் B ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளது அனைவருமறிந்த விடயம். தரமுயர்த்தப்பட்டதில் இருந்து பதில் கடமை வைத்திய அத்தியட்ச்சகர்களே இங்கு கடமை புரிந்துள்ளனர்.
அண்மையில் சுகாதார அமைச்சின் மருத்துவ நிருவாக மேற்படிப்பு கற்கைநெறிகளை (MSc in Medical Administration ) வெற்றிகரமாக பூர்த்திசெய்தவர்கள் வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
அந்த அடிப்படையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட டாக்டர். சகீலா இஸ்ஸதீன் ,MBBS,DLM,MSc MA நேற்று 08 10 2015 வியாழக்கிழமை கடமையை பொறுப்பேற்றார்.
ஏற்கனவே சட்ட மருத்துவத்துறையில் டிப்ளோமா(Diploma in legal Medicine) கற்கையை பூர்த்திசெய்த இவர்,தேசிய,மாகாண ரீதியில் நடைபெற்ற உற்பத்தித்திறன் போட்டியில் பங்குபற்றி, தொடர்ச்சியாக மூன்று முறை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சிறந்த சேவையாளர் என்ற பெயரினை பெற்றுக்கொடுத்த்வர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் 5”S” திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியான இவர் இத்துறையின் சிறந்த ஒரு வளவாளரும் கூட .
இதுவரை சுகாதார அமைச்சின் மருத்துவ முகாமைத்துவ கற்கைகளில் பங்குபற்றி சித்தியடைந்தமுதலாவது முஸ்லீம் பெண் டாக்டர் என்ற பெருமையும் இவரையே சேரும்.இவர் கல்முனை பிராந்திய சபிரதி காதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இஸ்ஸதீன் அவர்களது துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு தகமையும் கொண்ட ஒரு வைத்திய அத்தியட்சரின் வருகை இதுவரை காலமும் மக்கள் மத்தியில் நிந்தவூர் வைத்தியசாலைபற்றி இருந்த அவநம்பிக்கையை இல்லாமல்செய்யுமென எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

Congratulations Dr Saheela Issadeen
ReplyDeleteKeep up your good work
It's a hospital which has almost all infrastructure facilities
Now it needs a good leader
Carry on
Best of luck