Header Ads



பிரான்சில் புறக்கணிக்கப்படும், முஸ்லிம்கள்

பிரான்ஸ் நாட்டில் மற்ற மதத்தினரை விட முஸ்லீம் மக்கள் வேலை வாய்ப்பில் அதிகமாக புறக்கணிக்கப்படுவது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள சொர்போன்னி பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் மாரி அன்னி வல்பொர்ட்.

இவர் பிரான்சில் வேலைவாய்ப்பில் உள்ள வேறுபாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

இதற்காக வெவ்வேறு கம்பெனிகளுக்கு  தனது மாணவர்கள் மூலமாக 6231 விண்ணப்பங்களை அனுப்பினர்.

லெபனானின் பியூரிட்டில் பிறந்த அவர்களில் கத்தோலிக்கியர்கள், முஸ்லிம்கள், ஜூயூஸ் என்று அனைவரும் உள்ளவாறு வல்போர்ட் பார்த்துகொண்டார்.

மேலும் அனைவரும் தங்களின் இறுதி பெயரை ஹத்தாத் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த விண்ணப்பங்கள் மூலம் அதிகளவு கத்தொலிக்கியர்களுக்கே வேலைக்கான அழைப்பு வந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்கள் அனுப்பிய விண்ணப்பங்கள் மூலம் 17.9 சதவீத கத்தொலிக்கியர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

ஆனால் இது முஸ்லிம்களில் 4.7 சதவீதமாக உள்ளது. இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் இருப்பதாகவே விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனினும் முஸ்லிம்களுக்கு மிகவும் குறைந்த அளவே நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த ஆய்வில் நேர்முகத்தேர்வில் புறக்கணிக்கப்படும் முஸ்லிம்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுவது தெளிவாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.